தன்னுடைய வளைகாப்பில் செம்மையாக நடனம் ஆடிய நடிகை பூர்ணா - வைரலாகும் வீடியோ

By subhashini · 9/2/2026

தென்னிந்தியா சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பூர்ணா. இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன் இவர் மலையாளத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் நிறைய பட வந்து இருந்தது.

அதற்கு பிறகு இவர் தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் பூர்ணா தவித்து கொண்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. பின் இடையில் இவர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று இருந்தார்.

பூர்ணா குறித்த தகவல்:

இதை தொடர்ந்து மீண்டும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வந்தார். மேலும், சினிமா வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் நடிகை பூர்னாவிற்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் Shanid Asif Ali என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின் கடந்த 2023 ஆம் ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக பூர்ணா அறிவித்திருந்தார்.

பூர்ணா குடும்பம்:

பின் பூர்ணாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகும் பூர்ணா மீண்டும் நடித்துக் கொண்டுதான் வருகிறார். இவர் சமீப காலமாக பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக பூர்ணா சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்.

https://www.youtube.com/shorts/4ShVFOenj6o

பூர்ணா வளைகாப்பு:

இப்படி இருக்கும் நிலையில் நடிகை பூர்ணாவின் இரண்டாவது குழந்தைக்கான வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. அதில் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய வளைகாப்பு விழாவில் பூர்ணா சந்தோஷமாக நடனம் ஆடி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full