'அல்லாஹ்வின் பரிசு' குழந்தை பிறந்த சந்தோஷத்தில் நடிகை பூர்ணா கணவர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
தென்னிந்தியா சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பூர்ணா. இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் Shanid Asif Ali என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் கடந்த 2023 ஆம் ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக பூர்ணா அறிவித்திருந்தார். பின் பூர்ணாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகும் பூர்ணா மீண்டும் நடித்துக் கொண்டுதான் வருகிறார். இவர் சமீப காலமாக பெரும்பாலும் குணச்சித்திர இவர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக பூர்ணா சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார். பின் நடிகை பூர்ணாவின் இரண்டாவது குழந்தைக்கான வளைகாப்பு நடைபெற்று இருந்தது. அதில் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். தன்னுடைய வளைகாப்பு விழாவில் பூர்ணா சந்தோஷமாக நடனம் ஆடி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் பூர்ணாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது.
பூர்ணா கர்ப்பம்:
அதாவது, இன்று அதிகாலையில் தான் நடிகை பூர்ணாவிற்கு அழகாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இது தொடர்பாக பூர்ணாவின் கணவர் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அல்லாவின் விலைமதிப்பற்ற பரிசு. எங்கள் அஹமது குட்டியின் அன்பான சகோதரி. இது எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். சுகப்பிரசவமானது. அல்லா எங்கள் குடும்பத்தையும் குழந்தையையும் ஆசீர்வதிக்கட்டும்.
பூர்ணா கணவர் பதிவு:
டாக்டர், பிரசவறையில் இருந்த செவிலியர்கள், ஆஸ்டர் மருத்துவமனை குழுவினர் அனைவருக்குமே எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்காக பிராத்தனை செய்த அனைத்து அன்பானவர்களுக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து பலருமே பூர்ணாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும், பூர்ணா அவர்கள் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.
பூர்ணா குழந்தை:
அதற்கு முன் இவர் மலையாளத்தில் வெளியான படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் நிறைய பட வந்து இருந்தது. அதற்கு பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருந்தார். இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் பூர்ணா தவித்து கொண்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. மீண்டும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வந்தார்.