திருமணத்திற்கு பின் மன்னிப்பு பத்திரிக்கை வெளியிட்ட சகுனி பட நடிகை - இது என்ன புது ட்ரெண்டா ?

By Rajkumar · 31/5/2021

சினிமாவை பொறுத்த வரை அழகாக இருக்கும் பல்வேறு நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் சரியாக அமைவதில்லை. அந்த வகையில் பிரனீதா சுபாஷ்ஷும் ஒருவர். தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரனீதா சுபாஷ். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான 'சகுனி' படத்தின் மூலம் ரசிகர்களை பரிச்சயமானார். மேலும், சூர்யா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மாஸ் படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்து இருந்தார்.

அழகான தோற்றம் இருந்த போதும் கார்த்தி மற்றும் சூர்யாவை தவிர இவருக்கு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'ஜெமினிகணேசனும் சூரிலிராஜனும்' படத்தில் நடித்திருந்தார். தமிழில் வாய்ப்பு இல்லை என்றாலும் தற்போது கன்னடம், தெலுங்கு போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பிரணிதா சுபாஷ்.

இதையும் பாருங்க : தனக்கு கொடுத்த பட்டத்தை திருப்பிக் கொடுப்பதாக அறிவித்த பாலாஜி - காரணம் இது தானாம்.

அது மட்டும் இல்ல தற்போது ஹிந்தியில் வெளியாக இருக்கும் புஜ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் திடீர் திருமணம் செய்துள்ளது இவரது ரசிகர்களை பெரும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மே 28-ஆம் தேதி நடிகை பிரணிதா தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டதாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவியது. இதை பலரும் வதந்தி என்று தான் நினைத்தார்கள்.

இப்படி ஒரு நிலையில் நித்தின் ராஜ் என்பவரை ப்ரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து பத்திரிகை ஒன்றை வெளியிட்டுள்ள ப்ரணிதா, எங்களுக்கு 30 ஆம் தேதி தான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு அழைக்காத்தற்கு மன்னித்துவிடுங்கள் கொரோனா பிரச்சனை காரணமாக எப்போது திருமணம் நடைபெறும் என்பதை எங்களாலே உறுதி செய்ய முடியவில்லை. அணைத்து பிரச்சனையும் முடிந்த பின் இதனை நிச்சயம் கொடடுவோம் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full