இதுக்கு காஸ் செலவு பண்ணாம இருந்த இப்படி தான் இருந்திருப்பேன் - பிரியா ஆனந்த்தின் குசும்பான மீம்.

By Rajkumar · 17/6/2021

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியா ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஜெய் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வாமனன்” என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் முன்னணி நடிகையாக வரவில்லை என்றாலும் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார். கடைசியாக ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல் கே ஜி என்ற படத்தில் பிரியா ஆனந்த் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தமிழில் துருவ் விக்ரம் அறிமுகமான ஆதித்ய வர்மா படத்திலும் நடித்து இருந்தார். தற்போது அம்மணிக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். சமீபத்தில் இவர் மாயா என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார்.

இதையும் பாருங்க : அன்னிக்கி கோலா adல நடிச்சிட்டு, கத்தில அத எதிர்க்குறீங்க. இது நயவஞ்சகம் இல்லையா ? 7வருடத்திற்கு முன் விஜய் சொன்ன பதில் இன்று வைரல்.

அதில் குளியல் துண்டை கட்டிக்கொண்டு கழுத்தில் 2000 ரூபாய் மாலையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இந்த புகைப்படத்தை வைத்து மீம் ஒன்று வெளியானது. அதில், சாப்பாட்டை ஆர்டர் செய்யாமல் இருந்தால் இப்படி தான் இருப்பேன் என்று கூறிபிடபட்டு இருந்தது.

இந்த மீமை பிரியா ஆனந்த் லைக் செய்து உள்ளார். சமீபத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் நீண்ட நாட்களுக்கு முன் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தான் சந்தோசமாக சிரிக்கும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ள பிரியா ஆனந்த், டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று அறிவித்ததும் என்னுடைய ரியாக்ஷன் இதுதான் என கேப்ஷன் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full