தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியா ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஜெய் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வாமனன்” என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் முன்னணி நடிகையாக வரவில்லை என்றாலும் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்.

கடைசியாக ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல் கே ஜி என்ற படத்தில் பிரியா ஆனந்த் நடித்திருந்தார். தற்போது அம்மணிக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.இருப்பினும் இவர் தற்போது சுமோ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் ஃபேர்னஸ் சார்ந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி இருந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதையும் பாருங்க : திட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.

Advertisement

அந்த வீடியோவில் பிரியா ஆனந்த் அவர்கள் கூறியது, நான் கண்டிப்பாக ஃபேர்னஸ் சம்மந்தமான விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்.வெள்ளையாக இருப்பது தான் அழகு என்று சொல்லுவது ரொம்ப தப்பான விஷயம்.நம்முடைய நம்பிக்கையும், தைரியமும் தான் நமது வெற்றிக்கு காரணம்.தென்னிந்திய பெண்களின் முகத்தில் இருக்கும் கலை வேறு எங்கும் கிடையாது.

அதை விட்டுட்டு ஃபேர்னஸ் க்ரீம் போட்டால் தான் அழகு, வெள்ளை என்று சொல்லுவது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியிருந்தார். நடிகை பிரியா ஆனந்த் பல்வேறு விதமான கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி இருக்கிறார். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் படு கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தற்போது நடிகை பிரியா ஆனந்த், ஜேம்ஸ், RDX, அந்தாகன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
Advertisement