பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்- மனம் திறந்த ரஞ்சித் மனைவி

By subhashini · 14/10/2024

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம் என்று ரஞ்சித் மனைவி பிரியா ராமன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஒரு வாரம் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். பின் முதல் வாரத்திற்கான எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிச்சயமான நபர்களில் ரஞ்சித்தும் ஒருவர்.

பிக் பாஸ் 8:

இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளில் இருந்தே சிறப்பாக விளையாடி வருகிறார். இவரை வைத்து ரவீந்தர் செய்த பிராங்க் நன்றாக இருந்தது. இருந்தாலும் அது தப்பாக போய் முடிந்திருந்தது. இதை விஜய் சேதுபதியும் கண்டித்திருந்தார். இருந்தாலுமே ரஞ்சித் குறித்து சில விமர்சனங்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் ரஞ்சித் குறித்து அவரின் மனைவியும் நடிகையுமான பிரியா ராமன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், ரஞ்சித் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.

பிரியா ராமன் பேட்டி:

ஒரு வாரத்துக்குள் தான் நாங்கள் அந்த முடிவை எடுத்தோம். ரஞ்சித் பிக்பாஸில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நேரத்தில் எங்களுக்கு தெரிந்த ஒரு இளம் ஜோடிகளுக்கு ஒரு நல்ல விஷயம் நடக்க இருந்தது. அன்று எங்கள் இருவரில் யாராவது ஒருவர் கலந்து கொள்ள வேண்டியதாக இருந்தது. அதனால் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. காரணம், அந்த இளம் ஜோடிகள் எங்களை நம்பி தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு யாருமே கிடையாது. அவர்களுக்கு ஒரு நல்லது நடக்கும் போது அந்த இடத்தில் நாங்கள் இருவருமே இருக்க வேண்டும் என்ற அந்த ஜோடிகள் ஆசைப்பட்டார்கள்.

https://www.youtube.com/watch?v=YBYb2DgH5wI

நிகழ்ச்சிக்கு வராத காரணம்:

நாங்களும் வாக்கு கொடுத்து விட்டோம். அந்த நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சி வந்ததால் ரஞ்சித்துக்கு பதிலாக நான் அந்த இடத்திலிருந்து அந்த ஜோடிகளுக்கு எங்களால் முடிந்ததை எல்லாம் செய்தோம். ரஞ்சித் ரொம்ப இலக்கிய மனது கொண்டவர். ரஞ்சித் வெளியில் எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் அவர் எந்த இடத்திலுமே நடிக்கவில்லை. நிஜ வாழ்க்கையில் ரஞ்சித்தால் நடிக்கவே முடியாது. அவருடைய நடவடிக்கை மாறவில்லை. எப்போதும் அவர் அப்படித்தான் இருக்கிறார். வெளியில் எப்படி அவர் எல்லோரிடமும் தங்கம், சாமி என்று பேசுகிறாரோ அப்படித்தான் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் பேசுகிறார்.

ரஞ்சித் குடும்பம்:

அவர்களுக்கு அது புதிதாக இருப்பதால் அவரை தவறாக புரிந்து கொள்கிறார்கள். காலப்போக்கில் அவர்களும் ரஞ்சித்தை புரிந்து கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார். மேலும், பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 1999 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஆதித்யா மற்றும் ஆகாஷ் என்று இரு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால், சில காரணங்களால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பின் இவர் நடிகை ராகசுதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த மன வாழ்க்கையும் ஒரே ஆண்டில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து இவர் பிரியா ராமனுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full