ரஞ்சித் சொன்னது உண்மை தான், என்ன தப்பு பண்ணோம்- தன் மகன் குறித்து மனம் திறந்த பிரியா ராமன்

By subhashini · 13/11/2024

விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஐந்தாவது வாரம் முடிந்து 38 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 6 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். அதில் வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆவார்.

பிக் பாஸ் 8:

மேலும், போன வாரம் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளருமே தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்கள். இதில் நடிகர் ரஞ்சித், தன்னுடைய மகன் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர் என்பதை பற்றி எமோஷனலாக பேசியிருந்தார். இப்படி இவர் கூறியிருந்தது தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியில் பிரியா ராமன், பிக் பாஸ் வீட்டில் ரஞ்சித் சொன்னது உண்மைதான்.

ப்ரியா ராமன் பேட்டி:

எங்களுடைய மகன் ஆதித்யாவை நாங்கள் பிரச்சினையாகவே பார்க்கவில்லை. நான் ஆதித்யா அம்மா என்பதில் எனக்கு ரொம்ப பெருமை. இந்த மாதிரியான ஒரு குழந்தையை வீட்டில் வளர்ப்பது சவாலான விஷயம். ஆதித்யாவுக்கு ஆட்டிசம் என்று சொன்னபோது எனக்கு பலர் ஆறுதல் சொல்லி புலம்பி இருந்தார்கள். இதனால் நானுமே வருத்தப்பட்டு அழுதெல்லாம் இருந்தேன். பின் இதுதான் என்று நான் அக்செப்ட் பண்ணி கொண்டு பல விஷயங்களை புரிந்து கொண்டேன். கடவுள் என்னை நம்பி அந்த குழந்தையை கொடுத்திருக்கிறார். என் மேல கடவுளுக்கு அவ்ளோ நம்பிக்கை இருக்கு என்று தோணுச்சு.

மகன் குறித்து சொன்னது:

கடவுள் எல்லோருக்கும் மண்பானையை கொடுத்து பிடித்த வண்ணத்தை அடித்துக் கொள்ள சொல்வார். ஆனால், எனக்கு களிமண் கொடுத்து என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கொள் என்று கொடுத்திருக்கிறார். அது எவ்ளோ பெரிய பொறுப்பு. இப்படி ஒரு அற்புதமான குழந்தைக்கு தாயாக என்னை கடவுள் தேர்ந்தெடுத்து இருக்கிறார். அப்படித்தான் இதை நான் பார்க்கிறேன். ரஞ்சித் சில வருஷமாகவே ரொம்ப தொலைஞ்சு போயிட்டார். சினிமாவுக்குள்ளே இல்லை. பின் அவர் அதில் இருந்து மீண்டு வந்து விட்டார். என்னுடைய மகனுக்கு ரஞ்சித்துடன் குணங்கள் நிறைய இருக்கு. ரொம்ப பாசமான குழந்தை.

https://www.youtube.com/watch?v=OjUpqqdzwI8

மகனின் நிலைமை:

ஆட்டிசம் உள்ள பிள்ளைகளுக்கு எமோஷனல் புரியாது என்று சொல்வார்கள். ஆனால், ஆதித்யா அப்படி கிடையாது. கொஞ்சம் டல்லாக இருந்தாலே பக்கத்தில் வந்து உட்கார்ந்து கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லுவார். அவன் என்ன தப்பு பண்ணினான்? இது யாருடைய தப்புமே கிடையாது. அதற்கு பிறகு தான் யார் மீதும் கோபத்தை கொட்ட கூடாது என்று புரிந்து கொண்டு எங்கள் மகனுடன் வாழ ஆரம்பித்தோம். அவனுக்காக நாங்கள் வாழ்க்கையில் எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டத்தை தாங்கிக் கொள்வோம். அவருடைய பயணத்தில் எங்க பயணமும் இணைந்து இருக்கிறது. அந்த புரிதல் வந்ததும் எங்களுக்குள் நிறைய விஷயங்கள் மாறி இருந்தது. இப்ப நாங்க எங்க போனாலும் அவனையும் கூட்டிட்டு தான் போறோம். அவனுக்கு மியூசிக் ரொம்ப பிடிக்கும். அவனுக்கு பிடித்ததை சந்தோசமாக செய்து கொண்டிருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full