அஜித் சாரிடம் இதை தான் கற்றுக்கொண்டேன் - நெகிழ்ச்சியில் குட் பேட் அக்லி பட நடிகை ப்ரியா வாரியார் சொன்னது
நடிகர் அஜித் பற்றி நெகிழ்ச்சியில் நடிகை பிரியா வாரியர் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைபெற்றது. இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.
குட் பேட் அக்லி படம்:
இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். மேலும், நேற்று இந்த படத்தினுடைய முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு வெளிநாடுகளில் படம் ரிலீஸ் ஆகிவிட்டது. அஜித் ரசிகர்கள் தியேட்டரில் ஆடி பாடியும், பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி இருக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் மட்டும் இந்திய அளவில் குட் பேட் அக்லி படம் 28.5 கோடி வசூல் செய்திருக்கிறது.
படம் குறித்த தகவல்:
மேலும், இந்த படத்தில் இடம் பெற்ற 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' என்ற பாடல் தான் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த பாடலில் நடனமாடி இளைனர்கள் மத்தியில் மீண்டும் பிரியா வாரியார் பிடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படம் தொடர்பாக பிரியா வாரியார் போட்ட பதிவில், எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. இதை நான் ரொம்ப நாட்களாகவே மனதிற்குள் வைத்திருக்கிறேன். நான் எழுதுகிற எதுவும் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த போதுமானதாக இருக்காது அஜித் சார்.
பிரியா வாரியார் பதிவு:
முதல் உரையாடல் இருந்து படப்பிடிப்பின் கடைசி நாள் வரையுமே யாரையுமே நீங்கள் புறக்கணிக்கவில்லை, மறந்து விடவும் இல்லை. செட்டில் இருக்கும் போது எல்லோரையும் சிறப்பாக கவனித்து அக்கறையுடன் பார்த்துக் கொண்டீர்கள். குழுவாக சேர்ந்து நாம் கப்பலில் சாப்பிட்ட அந்த உணவுகளையும் நகைச்சுவைகளையும் என்னால் மறக்கவே முடியாது. இந்த நேரத்தை உங்களுடன் செலவிட்ட நேரத்தையும் மறக்கவே முடியாது. உங்களுடன் நடித்ததில் ரொம்ப பெருமையாக இருக்கிறது. இவ்வளவு ஆர்வம், மரியாதையும் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததே கிடையாது.
அஜித் பற்றி சொன்னது:
குடும்பம், கார், பயணம், பந்தயம் பற்றி நீங்கள் பேசுவது உங்கள் கண்ணில் இருக்கும் ஆர்வத்தை பார்க்கும்போது அற்புதமாக இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் கவனித்து கொள்கிறீர்கள். இது என்னை போன்ற இளம் ஆர்வலர்களுக்கு ரொம்பவே உத்வேகம் கொடுக்கிறது. நீங்கள் ஒரு உண்மையான ஜெம். எவ்வளவு உயரத்தில் போனாலும் பணிவாக இருக்க வேண்டும் என்பதை நான் உங்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். உங்களுடன் பணியாற்றியதை நான் என்றென்றும் மறக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.