எனக்கு பெண் குழந்தை பிறந்தால் உன்ன மாதிரி இருக்கனும். காதலை உறுதி செய்தாரா பிரியா பவானி ஷங்கர் ?

By subhashini · 27/1/2020

தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து உள்ளார். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”. மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம்.

இதனை தொடர்ந்து காற்றின் மொழி படத்தை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் அவர்கள் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் வைத்து “பொம்மை” படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த பொம்மை படம் சைக்கோ மற்றும் ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நடிகை பிரியா பவானி சங்கர் தவிர மற்றொரு கதாநாயகியாக சாந்தினி இந்த படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

இப்படி தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர். மேலும், கடந்த ஆண்டு நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறது. தற்போது அம்மணி காட்டில் அடைமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பவானி சங்கர் நடித்து வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில் இவர் ராஜ் வேல் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வருகிறது. ஆனால், இதுவரை ஒரு முறை கூட பிரியா பவானி சங்கர் வெளிப்படையாக கூறியதில்லை. மேலும், இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் அதிகமாக வந்து கொண்டு தான் இருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்தது தான்.

https://www.instagram.com/p/B7z38ltjKBA/

தற்போது பிறந்தநாள் கொண்டாடும் ராஜ் வேலுக்காக நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் அழகிய காதல் பொங்கும் வரிகளால் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்து வருகிறார்கள். தற்போது இந்த நியூஸ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full