கண்டத வைரல் ஆக்குறத விட இதை வைரல் ஆக்குங்க - தனது அடுத்த பரிமாணம் குறித்து ரக்ஷிதா.

By subhashini · 26/1/2024

ரக்ஷிதாவின் புது படத்திற்கான அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியாபுரம், நாம் இருவர் நமக்கு இருவர் 2, இது சொல்ல மறந்த கதை போன்ற பல சீரியல்கள் நடித்திருக்கிறார்.

இதனால் இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். மேலும், இவர் சீரியலில் மட்டுமில்லாமல் உப்புக் கருவாடு, மெய்நிகரே, ஃபயர் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இது தவிர சில கன்னட படங்களிலும் நடித்தார். இப்படி ஒரு நிலையில் தான் ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இவர் டைட்டில் வின்னர் ஆவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை.

தினேஷ்- ரக்ஷிதா சண்டை:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் வேறு எந்த தொடரிலும் கமிட் ஆகவில்லை. மேலும், படங்களில் ரக்ஷிதா நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு முழுவதும் தினேஷ்-ரக்ஷிதா பிரச்சனை தான் அதிகமாக சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு இருந்தது. பலரும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தார்கள். எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது. சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரின் பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது.

தினேஷ்- ரக்ஷிதா சர்ச்சை:

அதற்குப் பின் இவர்கள் இருவரும் முறையாக விவாகரத்து செய்ய இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தினேஷ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இவர் தன்னுடைய மனைவி குறித்து தான் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இருந்தாலும் ரக்ஷிதா மனம் வரவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தினேஷ், நான் உள்ளே போகும்போது எப்படி இருந்ததோ, அதே மாதிரி தான் அவரும் இருக்கிறார். இனி ரட்சிதாவிடம் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை இல்லை.

View this post on Instagram

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

ரக்ஷிதா பதிவு:

நான் என்னுடைய அடுத்த வேலையை பார்க்க போகிறேன் என்று கூறியிருந்தார். அதற்கு ஏற்ப ரக்ஷிதாவும் தற்போது தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் நடிகை ரக்ஷிதா ஒரு படத்தில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரக்ஷிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவல் துறை உடை அணிந்து கையில் துப்பாக்கியுடன் கோபமாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

ரக்ஷிதா நடிக்கும் படம்:

அதில் அவர், என்னுடைய அடுத்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும். அது மட்டும் இல்லாமல் கண்டதையெல்லாம் வைரல் ஆக்குவதை விட இதை வைரல் ஆக்குங்கள் என்று ரசிகர்களுக்கு ரக்ஷிதா வேண்டுகோள் வைத்து இருக்கிறார். தற்போது ரக்ஷிதாவின் இந்த பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full