முரளி சூட்டிங்கில் இப்படி தான் நடந்து கொள்வார், ஆனால் வடிவேலு - 'சுந்தரா ட்ராவல்ஸ்' நடிகை ராதா பகிர்ந்த தகவல்
தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிக பிரபலமான நடிகராக ஒரு முரளி. இவர் நடிப்பில் இயக்குனர் அசோகன் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ‘சுந்தரா ட்ராவல்ஸ்’. இந்த படத்தில் வடிவேலு, ராதா, வினுச்சக்ரவர்த்தி, மணிவண்ணன் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ஒரு ஓட்டை பஸ்ஸை வைத்து தான் முழு படமும் இயங்கி இருந்தது. அதிலும் இந்த படத்தில் வந்த எலி தான் இந்த படத்திற்கு ஒரு முக்கிய பங்கை கொடுத்தது. இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.
மேலும், மலையாளத்தில் வெளியான ஈ பறக்கும் தளிகா என்ற படத்தினுடைய ரீமேக் தான் சுந்தரா டிராவல்ஸ். இந்த படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் இருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய இரண்டாம் பாகம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் என்று இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தை மலையாள இயக்குனர் இயக்கியிருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தை இயக்குனர் கருப்பு தங்கம் என்பவர் இயக்குகிறார்.
சுந்தரா டிராவல்ஸ் படம்:
இரண்டாம் பாகத்தில் கருணாஸ், கருணாகரனும் முன்னணி கதாபாத்திரங்களில் களமிறங்கி இருக்கிறார்கள். முதல் பாகத்தில் இருந்த தொழில்நுட்ப கலைஞர்களே இரண்டாம் பகுதியிலும் பணியாற்ற இருக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தினுடைய நாயகி ராதா அளித்த பேட்டியில், இத்தனை வருடங்கள் ஆனாலுமே சுந்தரா டிராவல்ஸ் இப்போ ரிலீசான மாதிரி தான் இருக்கிறது. நான் தெலுங்கில் இரண்டு படம் நடித்திருந்தாலும் தமிழில் என்னோட முதல் படம் சுந்தரா டிராவல்ஸ் தான். முதல் படமே ஹிட் கொடுத்தது எனக்கு பெரிய ஆசீர்வாதம்.
நடிகை ராதா பேட்டி:
நிறைய பேர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ரொம்ப கஷ்டப்பட்டதாக சொல்கிறார்கள். அப்படி நான் எந்த கஷ்டமும் படவில்லை. மூன்று நாட்களில் ஷூட்டிங் போய் விட்டேன். எல்லாமே ரொம்ப சுலபமாக அமைந்தது. முரளி சார் ரொம்ப நல்ல மனிதன், மரியாதைக்குரியவர். எனக்கு தமிழில் முதல் படம் என்பதால் நான் எதுவும் பதட்டமாக கூடாது என்று ரொம்ப கம்போர்ட் ஆக வைத்திருந்தார். பஸ்ஸில் நான் அவரை அடிக்கிற மாதிரி ஒரு சீன் வரும். அப்போ தெரியாமல் அவர் என் மேல கை பட்டு விட்டது. ஆனால், அவர் இட்ஸ் ஓகே என்று ரொம்ப கூலாக எடுத்துக் கொண்டார். ஆனால், அவர் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு காலேஜ் சீனியர் மாதிரி தான். ரேகிங்கெல்லாம் பண்ணுவார்.
https://www.youtube.com/shorts/p85FgEP9zGo
வடிவேலு பற்றி சொன்னது:
அதேபோல் வடிவேலு சார் பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி பழகுவார். ரொம்ப எதார்த்தமாக எளிமையாக உட்கார்ந்து பேசக்கூடியவர். ஷூட்டிங்கில் வடிவேல் சார் கூட தான் அதிகமாக உட்கார்ந்து இருப்பேன். நிறைய சொல்லிக் கொடுப்பார். ஒவ்வொரு காமெடி காட்சியும் நாங்க பேசி வைத்துக் கொண்டுதான் பண்ணுவோம். அது ரொம்ப கலகலப்பாக இருக்கும். நான் வடிவேலு சாருடன் தான் உட்கார்ந்து சாப்பிடுவேன். அப்ப முரளி சார் எங்களை பார்த்து ஒரு முறைமுறைப்பார். அது செம சிரிப்பாக இருக்கும். நான் சிரித்ததும் பக்கத்தில் இருக்கிற வடிவேல் சார், ஏன்ம்மா என் வேலையை காலி பண்ணி விடுவீங்க போலையே என்றாலும் கிண்டல் பண்ணுவார்.
https://www.youtube.com/watch?v=_qS1Qv37Ds0
சுந்தரா ட்ராவல்ஸ் 2:
அந்த அளவுக்கு சூட்டிங் ஸ்பாட் செம ஜாலியாக இருக்கும். இன்னொரு பக்கம் இந்த படத்தில் நாலாவது முக்கியமான ஆர்டிஸ்ட் இருந்தார் அவர்தான் எலி. அந்த படத்தில் வர காட்சிகள் பலருமே கிராபிக்ஸ் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் கிடையாது. உண்மையான எலியை வைத்து தான் அந்த படம் எடுத்தார்கள். இந்த இரண்டாம் பாகத்தில் எலிக்கு பதிலாக இன்னொருத்தர் வருகிறார். 8 வருடங்களுக்கு முன்னாடியே சுந்தரா ட்ராவல்ஸ் 2 எடுப்பதாக இருந்தது. அதில் நடிக்க கேட்டார்கள். டிரஸ் எல்லாம் கொஞ்சம் சேஞ்ச் பண்ண சொன்னார்கள். அதனால் நான் நடிக்கவில்லை. இப்போது திரும்ப நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அம்மா கதாபாத்திரம். அதனால் தான் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் நான் ஹீரோயினியாக நடித்த பெருமையை எனக்கு போதும். இப்ப நான் சினிமாவில் கவனம் செலுத்துவது மட்டும்தான் என்னுடைய ஒரே குறிக்கோள். வெட்டு என்ற படத்தில் நடித்திருக்கிறேன். சீக்கிரம் ரிலீஸ் ஆகப்போகிறது. நல்ல படங்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.