ராதாவின் திருமண வரவேற்பு வீடியோ - ஜோடியாக வந்த ராமராஜன் - நளினி, பார்த்திபன் - சீதா. ரெண்டு ஜோடியும் இப்படி பிரிஞ்சிட்டாங்களே.
நடிகை ராதாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ராதா. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பழமொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் கதாநாயகியாகவே நடத்தி இருக்கிறார். மேலும், 80, 90 காலகட்டத்தில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக ராதா திகழ்ந்தார்.
இவருடைய சகோதரி நடிகை அம்பிகா. இவரும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான். அதோடு நடிகை ராதா அவர்கள் சிவாஜி, ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் நடனம், வசனம் என தனித்துவமான திறமையால் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்திருக்கிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
ராதா குடும்பம்:
இவர் கடைசியாக 1991 ஆம் ஆண்டு சாந்தி எனது சாந்தி என்ற படத்தில் நடித்து இருந்தார். பின் சினிமா பட வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் ராதா சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். மேலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இதனிடையே கடந்த 1996 ஆம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை ராதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா, விக்னேஷ், துளசி என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=wjl3hnuuQc0
ராதா பிள்ளைகள்:
அதில் மூத்த மகளான கார்த்திகா தெலுங்கில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ஜூஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து இருந்தார். இருந்தாலும், இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை. பின் ராதாவின் இளைய மகள் துளசியும் நடிகையாக இருக்கிறார். இப்படி இருவரும் தன் தாயை போல் சினிமாவில் கொடி கட்டி பறக்க முடியவில்லை.
ராதாவின் திருமண வரவேற்பு :
இந்த நிலையில் நடிகை ராதாவின் திருமண வரவேற்பு வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது 1991 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நடிகர் ராதாவின் திருமண வரவேற்பு தொடர்பான வீடியோ காட்சிகள் டூரிங் டாக்கீஸ் என்ற youtube தளத்தில் வெளியாகியிருக்கிறது. இவர்களுடைய திருமண வரவேற்பு விழாவில் நடிகை ராதாவுடன் பல முன்னாடி நடிகர்கள் இருக்கின்றனர். அதில் பார்த்திபன்- சீதா, ராமராஜன்- நளினி ஆகியோரும் ஒன்றாக இணைந்து கலந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால், தற்போது அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் நடிகர் சத்யராஜ், விஜயகாந்த் இருவருமே தனியாக வந்திருந்தார்கள். அதன் பிறகு நடிகர்கள் அனைவரும் இணைந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு தான் இவர்கள் தங்களுடைய 31 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடியிருந்தார்கள். இது குறித்து கூட ராதா சோசியல் மீடியாவில் பதிவு போட்டிருந்தார். தற்போது இவர்கள் இருவரும் தங்களின் 32 வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறார்கள்.