கையெடுத்து கும்பிடுறேன், உங்க டிஆர்பிக்காக இப்படி எல்லாம் பண்ணாதீங்க - கொந்தளித்த நடிகை ராதிகா
இயக்குனர் பாக்யராஜ் மறைவு
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று பல துறைகளில் சாதித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் பாக்கியராஜ். தற்போது இவருடைய மறைவு செய்திதான் சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரையும் பாக்கியராஜ் மறைவு செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இவர் தமிழ் சினிமாவிற்கு ஏராளமான படைப்புகளை கொடுத்திருக்கிறார். இவருடைய தனித்துவமான கதையும் இயல்பான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது.
முதலில் இவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொரு துறையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வந்தார். இவர் இயக்கிய பல வெற்றி படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும், இவரை திரைக்கதை மன்னன் என்று பலரும் அழைத்தார்கள். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு போன்ற பிறமொழி படங்களையும் இயக்கியும் நடித்திருக்கிறார்.
பாக்கியராஜ் குறித்த தகவல்:
சமீபத்தில் தான் இவருடைய 50 ஆண்டுகால திரைப்பயணம் நிறைவடைந்தது அடுத்து விழாவும் நடத்திருந்தார்கள். அதோடு நேற்று கூட கோவாவில் நடந்த குஷ்புவின் மகள் திருமணத்தில் கூட பாக்கியராஜ் சந்தோஷத்துடன் கலந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று காலை பாக்கியராஜ் காலமாகி இருக்கும் செய்திதான் தற்போது சோசியல் மீடியாவில் பேரதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இவர் இன்று வாக்கிங் சென்று வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்திருக்கிறார்.
பாக்கியராஜ் மறைவு:
உடனடியாக இவரை குடும்பத்தினர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் இறந்திருக்கிறார். தற்போது இவருக்கு 73 வயது தான் ஆகிறது. சில வாரங்களுக்கு முன்பு தான் இவருடைய குருவான பாரதிராஜா காலமாகி இருந்தார். 17 நாட்களிலேயே குருவை தொடர்ந்து சிஷ்யன் பாக்கியராஜ் இறந்திருப்பது தமிழ் திரையுலகை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
ராதிகா ஆவேசம்:
இது ஒரு பக்கம் இருக்க, பாக்யராஜ் வீட்டில் ஊடகங்கள் வீடியோக்களையும் பேட்டியையும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் கொந்தளித்த ராதிகா, தயவு செய்து உங்கள் எல்லோரையும் கையெழுத்து கும்பிடுகிறேன். நல்ல மனிதர். சினிமா எங்கள் தொழில்தான். உங்கள் டிஆர்பிக்காக இப்படி எல்லாம் செய்யாதீர்கள். உங்களுக்கு டிஆர்பி வேணும்னா நான் சினிமாவில் நடித்துக் கூட கொடுக்கிறேன். தயவுசெய்து கொஞ்சம் ப்ரைவேசி கொடுங்கள் என்று ரொம்ப எமோஷனலாக அழுது பேசி இருக்கிறார்