கழுத்தில் சிலுவை, கையில் சிகரெட் என செம்ம மாசான போஸ் கொடுத்துள்ள ராய் லட்சுமி.
தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராய் லட்சுமி. நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தின் மூலம் தான் ராய் லட்சுமி தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தாம் தூம், அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ராய் லட்சுமி அவர்கள் தமிழ் மொழியில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
https://www.instagram.com/p/B_jns4onsiC/
சமீப காலமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் இவர் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். பொதுவாக சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ராய் லட்சுமி இந்தி சினிமாவிற்க்கு சென்றதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு ராய் லட்சுமி அவர்கள் பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்தப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது. இந்த படத்தில் நடிகை ராய் லட்சுமி அவர்கள் படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருந்தார். இருந்தும் அதெல்லாம் பயனில்லாமல் போனது. அதுமட்டுமில்லாமல் லிப் லாக் காட்சிகளில் கூட நடித்திருந்தார் அம்மணி. மேலும், நடிகை ராய் லட்சுமி அவர்கள் சமீபத்தில் உதட்டை அழகு ஆக்குகிறேன் என்ற பெயரில் பிளாஸ்டிக் சர்ஜரி கூட செய்திருந்தார்.
https://www.instagram.com/p/B_kMPH-HlX6/
தற்போது தமிழில் இவர் சிண்ட்ரெல்லா, மிருகா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்கள் கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது. சிண்ட்ரெல்லா படம் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி அவர்கள் தான் நடித்த சிண்ட்ரெல்லா படத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார். எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார் ராய் லட்சுமி. இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அதோடு இவர் நிறைய பிகினி புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.
அந்த வகையில் தற்போது இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆடிப் போக வைத்துள்ளார். தான் நடித்த சிண்ட்ரெல்லா படத்திலிருந்து ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் தன்னுடைய கழுத்தில் சிலுவை, கையில் சிகரெட் என செம்ம மாசான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியந்து போய் உள்ளார்கள். இதை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள்.