இத பாத்ததும் அந்த விஜய் பட பாட்டு தான் ஞாபகம் வருது - ரம்பா மகளின் வீடியோவை கண்டு ரசித்த ரசிகர்கள்.

By Siva · 27/5/2023

நடிகை ரம்பா ரீலாக செய்ததை அவருடைய மகள் ரியலாக செய்து காட்டியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் நடிகை ரம்பா. இவருடைய நிஜ பெயர் விஜயலட்சுமி. இவர் 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான உழவன் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

View this post on Instagram

A post shared by Rambha💕 (@rambhaindran_)

அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாயாளம் என்று பல மொழி படங்களில் நடித்து கலக்கி இருக்கிறார். பின் இவர் தமிழில் 2010 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜுடன் இணைந்து விடியும் வரை கத்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த படம் வெளியாகவில்லை. அதற்குப்பின் இவர் கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு ரம்பா நடிப்பிலிருந்து எந்த படமும் வெளியாகவில்லை என்றாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Rambha💕 (@rambhaindran_)

ரம்பா குடும்பம்:

அந்த வகையில் இவர் மாநாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். தற்போது ரம்பா அவர்கள் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அடிக்கடி ரம்பா தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரம்பா மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்பா மகள் செய்தது:

அதாவது, நடிகை ரம்பா நடித்த நினைத்தேன் வந்தாய் படத்தில் அவர் பாட்டு பாடுவது போன்று நடித்திருப்பார். ஆனால், தற்போது நிஜத்தில் அவருடைய மகள் பள்ளியில் நடந்த விழா ஒன்றில் மேடையில் அழகாக பாடியிருக்கிறார். அந்த புகைப்படத்தை ரம்பாவின் கணவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ரம்பா மகளுக்கு பாராட்டி தெரிவித்து லைக்ஸ் குவித்து வருகிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full