யாழ்ப்பாண அரசு பள்ளி மாணவர்களுக்கான செயற்கைக்கோள் தயாரிப்பு திட்டம் - ரம்பா கணவரின் மறுபக்கம்

By Rajkumar · 4/10/2024

பிரபல நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் தன் நாட்டு மக்களுக்காக செய்திருக்கும் செய்தி தான் சோசியல் மீடியாவில் வரலாறு இருக்கிறது. தமிழ் சினிமாவில் இடுப்பழகி சிம்ரன், புன்னகை அரசி சினேகா என்று பலருக்கும் பட்டம் இருப்பது போல் தொடையழகி என்ற வித்தியாசமான பட்டத்துடன் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. இவர் 1993ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான 'உழவன்' என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதற்குப் பிறகு, 'உள்ளத்தை அள்ளித்தா' என்ற படத்தில் கார்த்திக் உடன் ஹீரோயின் ஆக ரம்பா நடித்தார். ஹீரோயினாக களமிறங்கி முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார் ரம்பா. அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் ரம்பா நடித்திருந்தார். பின் 2019 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இந்திரக்குமார் பத்மநாதன் பல தொழில்களை செய்து நம்பர் ஒன் பிசினஸ் மேனாக இருக்கிறார்.

யாழ்ப்பாண ‌மாணவர்களுக்கு செயற்கைக்கோள்:

இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாண பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் தயாரிக்கும் திட்டத்திற்காக இலங்கையில் உள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT Northern Uni), ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் சமீபத்தில் கையெழுத்து ஆனது. இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பேஸ் அகமதாபாத் இயக்குனர் பிரபுல்ல குமார் ஜெயின், SLIIT Northern Uni தலைவர் இந்திரகுமார் பத்மநாதன், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீமதி கேசன், கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார், இலங்கைக்கான தென்னிந்திய தூதரகத்தின் துணைத்தூதர் ஞான தேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://www.youtube.com/watch?v=lHraqbjT42s

இந்திரகுமார் பத்மநாதன் பேசியது:

ஒப்பந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரம்பா கணவர், 2018 ஆம் ஆண்டு குடும்பத்துடன் யாழ்ப்பாணத்திற்கு சென்று இருந்தோம். அப்போது தான் யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தோம். நிறைய பணத்துக்கு பணம் சம்பாதிச்சு பிரயோஜனம் இல்லை. அதை வச்சு என்ன பண்றோம்னு தான் முக்கியம். ரம்பா தான் நான் நம்ம பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறேன், நீங்க போய் ஜாப்னாவில் உள்ள பிள்ளைகளை பாருங்கள் என்று எனக்கு உறுதுணையோடு இருந்தார்‌.

SLIIT Northern Uni :

அதனால், வட ஸ்ரீலங்காவில் உள்ள மாணவர்களுக்கு, கவர்மெண்ட் யூனிவர்சிட்டியில் மிக குறைவாக இடங்கள் இருப்பதால், அதை சரி செய்ய வேண்டி ஸ்ரீலங்காவில் SLIIT Northern Uni ஆரம்பித்தோம். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்காக ஐடி நிறுவனங்களையும் தொடங்கி இருக்கிறோம். தற்போது இந்த ஒப்பந்தத்தால் இலங்கையில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியில் மாற்றம் உண்டாகும். மேலும், இதன் மூலம் விஞ்ஞானம் மற்றும் கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்க்க முடியும்.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் :

இந்த முயற்சி இலங்கை மற்றும் இந்திய ஆகிய இரு நாடுகளுக்கும் உத்வேகம் அளிக்கும் ‌. இரு நாடுகளின் வருங்கால மாணவர்கள், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் நுணுக்கங்கள் குறித்து நன்கு அறிந்து கொள்வார்கள். மேலும், இதன் மூலம் மாணவர்கள் இடையே விண்வெளி, செயற்கைக்கோள் அறிவையும், ஆர்வத்தையும் வளர்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதன் மூலம் அறிவியல் மற்றும் பொறியியலில் மேம்பட திறன்களை பார்ப்பது மட்டுமில்லாமல், குழு பணி மற்றும் தமக்கான இலக்குகள் குறித்தும் மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full