சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரைக்கு மீண்டும் என்ட்ரி கொடுக்க போகிறாரா ரம்பா? முழு விவரம் இதோ

By subhashini · 28/2/2025

நடிகை ரம்பா மீண்டும் வெள்ளித்திரையில் நடிப்பது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இடுப்பழகி சிம்ரன், புன்னகை அரசி சினேகா என்று பலருக்கும் பட்டம் இருப்பது போல் தொடையழகி என்ற வித்தியாசமான பட்டத்துடன் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. இவர் 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ‘உழவன்’ என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதற்குப் பிறகு ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரம்பா நடித்திருந்தார். ஹீரோயினாக களம் இறங்கிய முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் ரம்பா. அதனைத் தொடர்ந்து இவர் பல ஹிட் படங்களில் நடித்து இருந்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்திருந்தார். இதனிடையே நடிகை ரம்பா கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ரம்பா திருமணம்:

அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் ரம்பா சினிமாவில் இருந்து விலகி விட்டார். தன்னுடைய குடும்பம், குழந்தைகள், கணவர் பிசினஸ் என்று பிசியாக இருக்கிறார். மேலும், இவர்களுக்கு சொந்தமாக மேஜிக் குழந்தைகள் என்ற நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தான் இந்த நிறுவனத்தின் இரண்டாவது கிளையை கோவையில் உள்ள சிங்காநல்லூர் அருகே திருச்சி சாலையில் திறந்து வைத்தார்கள். இதை அடுத்து 30-க்கும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறக்க திட்டமிட்டு இருப்பதாக பேட்டியில் ரம்பா கூறி இருந்தார்.

ரம்பா குறித்த தகவல்:

அதோடு இதற்கிடையில் இவர் சில நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். அதற்கு பின் இவர் எந்த நிகழ்ச்சி, சினிமாவிலுமே தலைகாட்டாமல் தான் இருந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பின் ரம்பா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட நடன நிகழ்ச்சி தான் ஜோடி ஆர் யூ ரெடி. இது ஜோடி நம்பர் நிகழ்ச்சியின் 11வது பகுதி என்று கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ரியோ ராஜ் மற்றும் ஏஞ்சலின் தொகுத்து வழங்கி இருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

சின்னத்திரையில் ரம்பா:

மேலும், இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நடிகை மீனா, ஸ்ரீதேவி விஜயகுமார், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பங்கேற்று இருந்தார்கள். தற்போது இந்த நிகழ்ச்சியினுடைய இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த இரண்டாவது சீசனில் சாண்டி, ஸ்ரீ தேவி உடன் நடுவராக ரம்பா களமிறங்கி இருக்கிறார். இதன் மூலம் இவர் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆலுடன் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ரம்பா, திரைப்படங்களில் நடிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ரம்பா கம்பேக்:

திரைப்படங்கள்தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது. ஏதாவது முக்கியமான, நல்ல விஷயங்கள் நடந்தால் நிச்சயமாக நடிப்பேன் என்று கூறியிருந்தார். இருந்தாலுமே ரம்பா மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு கொண்டு வந்தார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக மக்கள் தொடர்பாளர் ரியாஸ், ரம்பா மீண்டும் வெள்ளி துறையில் கம்பேக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார். பன்முகத் தன்மை நடிப்பு திறன் கொண்ட ரம்பா தற்போது நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறி யிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full