இந்த வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா.! இளம் நடிகைகளையே மிஞ்சிய ரம்யா கிருஷ்ணன்.!

By Rajkumar · 3/9/2019

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன், 1970 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தனது 14 வயதில் 'பலே மித்ருலு ' என்ற தெலுகு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமானார். இதுவரை 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஒரு புகழ் பெற்ற நடிகை.

தெலுங்கில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை ரம்யாகிருஷ்னன், தமிழில் அறிமுகமான படம் 1983 ஆம் 'வெள்ளை மனசு' என்ற படத்தில் தான். அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டு ரஜினி நடித்த 'படிக்காதவன்' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த நடித்த 'கேப்டன் பிரபாகரன் படத்தில் ' வந்த ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

இதையும் பாருங்க : விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல புகைப்பட கலைஞர்.! பரிதாப நிலையில் கொம்பன் நடிகர்.! 

அதன் பின்னர் தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பன்மொழி படஙகளில் நடித்து வந்தார் ரம்யாகிருஷ்னன். ஆனால், பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவர்க்கு அமையவில்லை. இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 1999 ஆம் சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா தான். அந்த படத்திற்கு பின்னர் இவரது மார்க்கெட் எகிறியது. அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வந்த நடிகை ரம்யாகிருஷ்ணன் தனது 33 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார்.

தெலுங்கில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்தார். சமீபத்தில் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருநாள் தொகுப்பாளராகவும் கலந்து கொண்டார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த நிலையில் இளம் நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட் நடத்தி அசத்தியுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full