தயவுசெய்து அப்படி சொல்லாதீர்கள், கஷ்டமாக இருக்கு - தன்னுடைய திருமணம் பற்றி நடிகை ரம்யா பாண்டியன் புலம்பல்

By subhashini · 20/4/2025

தன்னை பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்து நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பின் இவர் ராஜி முருகன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோக்கர்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படம் சமூக பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இவர் இந்த படத்தில் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார். அதற்குப் பின்னர் தான் இவர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ‘ஆண் தேவதை’ என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி தரவில்லை. அதற்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. பின் இவர் நடத்திய போட்டோ சூட் மூலம் இளசுகள் மத்தியில் ட்ரெண்டிங் ஆனார். அதன்பின் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது.

ரம்யா பாண்டியன் குறித்த தகவல்:

அதனைத் தொடர்ந்து, இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். பின் இவர் ‘பிக் பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. இருந்தாலும், அதையெல்லாம் சமாளித்து படங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக, சூர்யா தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாளும்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.ரம்யா. அதன் பின்னர் இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

ரம்யா பாண்டியன் திருமணம்:

தற்போது இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதற்கிடையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சியாளராக பணியாற்றி வரும் லோவல் தவானுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இதை ரம்யா பாண்டியன் உறுதி செய்து இருந்தார். பின் சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு ரிஷிகேஷ் கங்கை நதிக்கரை ஓரத்தில் உள்ள கோயிலில் தான் திருமணம் நடைபெற்று இருந்தது.

ரம்யா பாண்டியன் திருமண சர்ச்சை:

திருமணத்திற்கு பிறகு இருவருமே சந்தோசமாக தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலுமே இவருடைய திருமணத்தில் நடந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாகி இருக்கிறது. அதாவது, நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய கணவரிடம் இருந்து வரதட்சணை வாங்கி தான் திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் செய்திகள் பரவுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ரம்யா பாண்டியன் விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், பள்ளி படிக்கும்போது இருந்தே என்னுடைய செலவுகளை நான் தான் பார்த்துக் கொண்டு வருகிறேன். காலேஜ் முடிந்த பிறகும் வேலை செய்து சம்பாதித்து தான் வருகிறேன்.

https://www.youtube.com/watch?v=aUexc6Io4sg

ரம்யா பாண்டியன் விளக்கம்:

சினிமாவிற்கு வந்த நடுவில் கொஞ்சம் தான் நான் எதுவும் செய்யவில்லை. ஆனால், இப்போது வரை நான் என்னுடைய செலவுகளையும் வீட்டையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். என்னுடைய திருமணத்திற்கு கூட நான் பாதி செலவு ஏற்றுக்கொண்டு தான் செய்தேன். இதில் வரதட்சணை என சொல்வதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. தங்களின் வீட்டிற்கு ஒரு பெண்ணை அழைக்கும் போது அவர்களுக்காக ஆடை, நகைகள் வாங்கி கொடுத்து அழைப்பது வழக்கமாம். அவர்களுடைய பழக்கத்தை மதித்து தான் நான் வாங்கினேன். இதனை வரதட்சனை என்று தயவு செய்து சொல்லாதீர்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full