கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை ரம்யா பாண்டியன் திருமணம்- வைரலாகும் புகைப்படம், குவியும் வாழ்த்துக்கள்
நடிகை ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பின் இவர் ராஜி முருகன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோக்கர்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் சமூக பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார். அதற்குப் பின்னர் தான் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ‘ஆண் தேவதை’ என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி தரவில்லை.
ரம்யா பாண்டியன் குறித்த தகவல்:
அதற்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. பின் இவர் நடத்திய போட்டோ சூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். அதன்பின் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.
ரம்யா பாண்டியன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்:
பின் இவர் ‘பிக் பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. இருந்தாலும், அதையெல்லாம் சமாளித்து படங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக, சூர்யா தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாளும்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.ரம்யா. அதன் பின்னர் இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
ரம்யா பாண்டியன் காதல்:
தற்போது இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் வரை இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர முகிலன் என்ற வெப் தொடரிலும் நடித்திருக்கிறார். இதற்கிடையில் ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சி பெற்றார். அப்போது அங்கு பயிற்சியாளராக பணியாற்றி வரும் லோவல் தவானுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இன்று ரிஷிகேஷ், சிவபுரி கங்கைக்கரையில் நடிகை ரம்யா பாண்டியன்-லோவல் திருமணம் இனிதே நடைபெற்றது...#RamyaPandian pic.twitter.com/XGRFGvafhw
— Priya Gurunathan (@JournoPG) November 8, 2024
ரம்யா பாண்டியன் திருமணம்:
இதை சமீபத்தில் ரம்யா பாண்டியன் உறுதி செய்து இருந்தார். இந்நிலையில் இன்று காலை ரிஷிகேஷ் கங்கை நதிக்கரை ஓரத்தில் உள்ள கோயிலில் தான் ரம்யா பாண்டியன்- லோவல் தவானுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், திருமண வரவேற்பு நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதில் பிரபலங்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. தற்போது ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.