அட, எவ்வளவு பெரிய நடிகை. ஆனால், வளைகாப்பை எவ்வளவு எளிமையா பண்ணியிருக்காரு பாருங்க.

By Rajkumar · 23/7/2020

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன், 1970 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தனது 14 வயதில் 'பலே மித்ருலு ' என்ற தெலுகு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமானார். இதுவரை 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஒரு புகழ் பெற்ற நடிகை.தெலுங்கில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை ரம்யாகிருஷ்னன், தமிழில் அறிமுகமான படம் 1983 ஆம் 'வெள்ளை மனசு' என்ற படத்தில் தான்.

https://twitter.com/meramyakrishnan/status/1285933663494868992

அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டு ரஜினி நடித்த 'படிக்காதவன்' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த நடித்த 'கேப்டன் பிரபாகரன் படத்தில் ' வந்த ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.அதன் பின்னர் தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பன்மொழி படஙகளில் நடித்து வந்தார் ரம்யாகிருஷ்னன்.

ஆனால், பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவர்க்கு அமையவில்லை. இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 1999 ஆம் சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா தான். அந்த படத்திற்கு பின்னர் இவரது மார்க்கெட் எகிறியது. அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வந்த நடிகை ரம்யாகிருஷ்ணன் தனது 33 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார்.

https://twitter.com/meramyakrishnan/status/1285994076106485760

மேலும், இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது வளைகாப்பின் போது எடுத்த சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மிகவும் சாதாரண புடவை அணிந்து இருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு அவரது பெரியம்மா இருவரும் வளையல் அணிந்து விடுகின்றனர். இவ்வளவு பெரிய நடிகையின் வளைகாப்பு இவ்வளவு எளிமையாக நடந்திருப்பது தான் ஆச்சரியமான விஷயம்.

behindtalkies AMP · Quick view
View full