எனக்கு எதிராக பணம் கொடுத்து எல்லாம் ட்ரோல் செய்கிறார்கள் - நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை

By subhashini · 9/8/2025

தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் குபேரா. இந்த படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்கியிருந்தார்

ராஷ்மிகா மந்தனா குறித்த தகவல்:

இந்த படத்தில் நாகர்ஜுனா, ஜிம் சர்ப் உட்பட பலர் நடித்திருந்தார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தனுஷின் நடிப்பும் இயக்குனர் உடைய வேலைப்பாட்டையும் பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். இதை அடுத்து இந்த படத்தினுடைய வெற்றி விழா கூட நடைபெற்றிருந்தது.

ராஷ்மிகா மந்தனா படங்கள்:

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஸ்மிகா அவர்கள் மைசா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களிலும் இவர் கமிட்டாகி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க,
ராஷ்மிகா மந்தனாவிற்கு உலக அளவில் ரசிகர்கள் இருந்தாலுமே அதே அளவுக்கு அவரை பற்றி எதிர் விமர்சனங்களும் வருகிறது. அடிக்கடி இவரை வைத்து ஏதாவது ஒரு விஷயத்தில் ட்ரோல்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ராஷ்மிகா மந்தனா பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஷ்மிகா மந்தனா, நான் கொஞ்சம் உணர்வுபூர்வமான நபர் தான். அதை நான் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டேன். அப்படி நான் செய்தால் ராஷ்மிகா மந்தனா கேமராவுக்காக செய்கிறார், நடிக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு எதிராக ட்ரோல்கள் நிறைய பண்ணுகிறார்கள்.

விமர்சனங்களுக்கு பதிலடி:

குறிப்பாக பணம் கொடுத்து என்னைப் பற்றி ட்ரோல் செய்ய சொல்கிறார்கள். சிலர் ஏன் இப்படி கொடூரமாக நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னை வளர விடாமல் தடுக்கின்றார்கள். இது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. என் மீது அன்பு காட்ட முடியாவிட்டாலும் அமைதியாக இருங்கள் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full