தன்னுடைய இளமைக்காலத்தில் அனுபவித்த வறுமை கொடுமை குறித்து ராஷ்மிகா கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ராஷ்மிகா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

தனது முதல் படத்திலேயே இவர் அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். பின் தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

Advertisement

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்கள்:

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் வாரிசு என்ற படத்தில் ராஸ்மிகா நடித்து இருக்கிறார். இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் வாரி குவித்து இருந்தது.

ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டி:

இதனை அடுத்து தற்போது ராஷ்மிகா மந்தனாதெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக படம் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவரை பலரும் நேஷனல் கிரஷ் என செல்லமாக அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் தன்னுடைய பெற்றோர் குறித்தும், தன்னுடைய வளர்ச்சி குறித்தும் கூறியது, என்னுடைய வளர்ச்சி குறித்து என் பெற்றோர் பெருமை எல்லாம் படவில்லை. காரணம், அவர்கள் சினிமா துறையில் இருந்து விலகி இருக்கிறார்கள். நான் என்ன செய்கிறேன் என்றெல்லாம் அவர்கள் அறிந்து கொள்வதில்லை.

Advertisement

இளம் வயது வறுமை:

ஆனால், நான் விருதுகள் வாங்கும்போது மட்டும் அவர்கள் பெருமையாக நினைத்துக் கொள்வார்கள். நான் இன்னும் சினிமா துறையில் சிறப்பாக செயல்பட்டு அவர்களுக்கு விருது வாங்கி அவர்களை பெருமைப்படுத்துவேன். அது மட்டும் இல்லாமல் என்னை அவர்கள் எந்த குறையும் இல்லாமல் நன்றாக வளர்த்தனர். நான் குழந்தையாக இருக்கும்போது அவர்களால் முடிந்த அனைத்தையுமே எனக்கு செய்து கொடுத்தார்கள். அதற்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். இப்போது நான் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டிய தருணம். என்னுடைய குழந்தை பருவத்தில் என்னுடைய பெற்றோர்கள் பொருளாதார ரீதியாக பல நெருக்கடிகளை சந்தித்து இருந்தார்கள். வாடகை கொடுக்க முடியாமல் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வீடு தேடி அலைந்தோம். குழந்தையாக இருக்கும்போதே என்னுடைய பெற்றோர்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் நான் உணர்ந்து இருக்கிறேன் என்றெல்லாம் கூறி இருந்தார்.

Advertisement
Advertisement