விஜய் தேவர்கொண்டாவுடனான திருமணம் பற்றி நான் மறுக்கவில்லை, ஆனால் - ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்

By ·

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே ராஷ்மிகாவின் காதல் கிசுகிசுகள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ராஷ்மிகா அவர்கள் ஐந்து வருடத்திற்கும் மேலாக தன்னுடன் நடித்த நடிகர் விஜய் தேவர் கொண்டாவை தான் காதலிக்கிறார், டேட்டிங் செய்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது.

அதற்கு ஏற்ப இருவருமே பல இடங்களில் ஒன்றாக சென்ற புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதோடு சில மேடைகளில் கூட விஜய் தேவர் கொண்டாவை காதலிப்பதாக மறைமுகமாக ராஷ்மிகா உறுதி செய்திருந்தார். இதை அடுத்து கடந்த மாதம் தான் ராஷ்மிகா-விஜய் தேவர்கொண்டா உடைய நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்ததாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்து இருவருமே எந்த ஒரு தகவலுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள்.

ராஷ்மிகா பேட்டி:

மேலும், ராஷ்மிகா கையில் இருக்கும் மோதிரத்தை வைத்து பலருமே இது நிச்சயதார்த்த மோதிரம் தான் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இருந்தாலுமே ராஷ்மிகா வாயை திறக்காமல் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் தேவர் கொண்டவுடனான திருமணம் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு ராஷ்மிகா, திருமணம் பற்றிய தகவலை இப்போது நான் உறுதி படுத்தவும் இல்லை மறுக்கவும் இல்லை.

திருமணம் பற்றி சொன்னது:

அதை பற்றி பேச வேண்டிய நேரம் வந்தால் கண்டிப்பாக சொல்லுவேன். நான் விஜய் தேவர் கொண்டாவிடம் வேலை விஷயமாக நிறைய பேசவே மாட்டேன். 80 சதவீதம் வேலையை பற்றி நான் வீட்டில் பேசமாட்டேன். வேலை சார்ந்து ஏதாவது ஒரு விஷயம் என் மனதில் பாரமாக இருந்தால் மட்டும்தான் ஆலோசனைக்காக விஜய் தேவர் கொண்டாவிடம் கேட்பேன். நான் என்னுடைய வேலையில் 100% கொடுப்பேன். ஆனால், வீட்டில் இருக்கும்போது வேலையைப் பற்றி பேச மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

ராஷ்மிகா திரைப்பயணம்:

மேலும், இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட்டில் வெளிவந்த தம்மா படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா அவர்கள் மைசா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களிலும் நடிக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full