SNAP CHAT ரசிகர்களுக்கு நேஷனல் கிரஸ் ராஷ்மிகா மந்தனா கொடுக்க உள்ள சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?

By subhashini · 30/6/2025

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். அதிலும் கடந்த ஆண்டு இவர் நடித்த புஷ்பா 2 படம் மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

இதை தொடர்ந்து ராஷ்மிகா அவர்கள் சல்மான்கானுடன் சேர்ந்து நடித்த சிக்கந்தர் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதன் பின் இவர் சாவா என்ற படத்தில் நடித்திருந்தார். இது மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து வெளியாகி இருந்தது. இதை அடுத்து சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்கியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் snapchatல் 10 மணிக்கு லைவ் வருகிறார். அதில் அவர், தன்னைப் பற்றி பலரும் அறியாத விஷயங்களைப் பற்றி கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சினிமா, சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயங்களை பற்றியும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full