குபேரா படப்பிடிப்பு தளத்தில் நீங்கள் கொடுத்தது, நாம் எடுத்த முதல் புகைப்படம் - நெகிழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா

By subhashini · 24/6/2025

தனுஷ் பற்றி எமோஷனலாக நடிகை ராஷ்மிகா மந்தனா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் குபேரா. இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தனுஷின் நடிப்பும் இயக்குனர் உடைய வேலைப்பாட்டையும் பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

குபேரா படம்:

இதை அடுத்து இந்த படத்தினுடைய வெற்றி விழா கூட நடைபெற்றிருந்தது. இந்நிலையில் தனுஷ் பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், தனுஷ் சார், உங்களுடன் நான் முழு படம் நடித்திருந்தாலுமே இதுதான் நானும் நீங்களும் சேர்ந்து எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம். நீங்கள் ஒரு அற்புதமான மனிதர். ஒவ்வொரு நாளுமே ரொம்ப கடினமாக உழைத்ததற்கு ரொம்ப நன்றி. வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு வேலைகளில் இருக்கும் போதும் ஓய்வு எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி எல்லாம் பேசியிருக்கிறோம்.

View this post on Instagram

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

ராஷ்மிகா பதிவு:

குபேராவில் மட்டுமில்லை, எல்லா படத்திலும் அற்புதமான நடிப்பை வழங்கியதற்கு ரொம்ப நன்றி. என்னிடம் மட்டுமில்லாமல் உங்களுடன் பழகி அனைவருடனும் அன்பாக இருந்தீர்கள். படப்பிடிப்பு தளத்தில் நீங்கள் எனக்கு எத்தனை லட்டுகள் கொடுத்தீர்கள் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எப்போதுமே அதை நான் மறக்கவே மாட்டேன். படப்பிடிப்பில் தமிழ் வரிகளை கற்றுக் கொடுத்த விதம், எப்படி நடிக்க வேண்டும், அதை சரியாக செய்து விட்டால் நன்றாக இருந்தது என்று நீங்கள் பாராட்டும் விதம் என அனைத்துமே அற்புதமான அனுபவமாக இருக்கிறது. இதை அனைத்தும் சாதாரண விஷயமாக உங்களுக்கு இருக்கலாம். இப்போது மட்டும் இல்லை எப்போதும் உங்களுக்கு எல்லா நல்ல விஷயங்கள் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்

படத்தின் கதை:

படத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் நீரஜ் க்ளோபல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் பல லட்சம் கோடி மதிப்பில் ஆன எண்ணைய் மற்றும் எரிவாயு ஒப்பந்தத்தை கைப்பற்ற திட்டம் போடுகிறார். பின் நீரஜ், இந்த திட்டத்தை தன்னுடைய பெயரிலோ, நிறுவனத்தின் மூலமோ செய்யக்கூடாது என்று நாகார்ஜுனாவை வைத்து செய்ய திட்டம் போடுகிறார். நாகர்ஜுனா முன்னாள் சிபிஐ
அதிகாரியாக இருந்தவர். இவர் சிறையில் இருக்கிறார்கள். நேர்மையாக இருந்துமே அரசாங்கம் தனக்கு குற்றவாளி பட்டம் சுமத்தியதால் அவருக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. இதனால் இவர் நீரஜினுடைய திட்டத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.

பின் நீரஜ் ஒரு லட்சம் கோடியில் 50 ஆயிரம் கோடி கருப்பு பணமாகவும் மீதி வெள்ளை பணமாகவும் தர வேண்டும். இதில் எனக்கும் என்னுடைய நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார். அதற்கு நாகர்ஜுனா இதை பினாமி மூலம் செய்கிறார். அதற்காக இவர் பிச்சைக்காரர்களை வைத்து பரிவர்த்தனை நடத்துகிறார். மேலும், பணம் கை மாறிய பிறகு அந்த பிச்சைக்காரர்களையும் கொன்று விடுகிறார்கள். அப்படி தான் இந்த இந்த பிரச்சினையில் தனுஷும் சிக்கிக் கொள்கிறார். ஊர் முழுவதுமே தனுஷை சல்லடை போட்டு தேடுகிறார்கள். இதற்கு இடையில் தனுஷ், ராஸ்மிகாவை சந்திக்கிறார். இறுதியில் தனுஷ் என்ன ஆனார்? கோடிக்கணக்கான பணம் கைமாற்றப்பட்டதா? ராஸ்மிகா நிலை என்ன? நாகார்ஜுனா என்ன செய்தார்? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full