ரெட் கார்ட் கொடுத்தா ஓட் போட கூடாதா? சீரியல் நடிகை ரவீனா ஆதங்கம் - நடந்தது என்ன?

By subhashini · 10/8/2025

தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தேர்தல் நடைபெறுவது வழக்கமான ஒன்று தான். இந்த சங்கத்தில் 2000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தலைவர் பதவியில் இருக்கும் சிவன் சீனிவாசன் தான் தற்போது மீண்டும் போட்டியிடுகிறார். மீண்டும் அவருடைய தலைமையிலான அணி தான் போட்டியிடுகிறது. அவரை தவிர பரத் தலைமையில் ஒரு அணி, தினேஷ் தலைமையில் ஒரு அணி என மூன்று அணிகள் போட்டியிட்டு இருக்கிறார்கள். நடிகை ஆர்த்தி கணேஷ் மட்டும் சுயேச்சையாக தலைவர் பதவிக்கும் அவருடைய கணவர் கணேஷ் அவர்கள் சுயேச்சையாக துணை தலைவர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=THzVmU4XthE

இதில் தினேஷ் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை ரவீனா போட்டியிட மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தார். ஆனால், இவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. ஏற்கனவே நடிகை ரவீனா மீது நடிகர் சங்கத்திலிருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட செய்தி பரவி இருந்தது அனைவரும் அறிந்ததே. காரணம், சில மாதங்களுக்கு முன்பு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி தொடரில் நடிக்க கமிட் ஆகி ப்ரோமோ சூட்டெல்லாம் நடித்து இருந்தார். அதன் பின்பு இவர் நடிக்க மறுத்திருக்கிறார். இது தொடர்பாக சீரியல் குழுவினர் நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்கள்.

நடிகர் சங்க தேர்தல்:

அதற்கு பின் ஓராண்டுக்கு சீரியலில் நடிக்க ரவீனாவிற்கு தடைபிடிக்கப்பட்டது. ரவீனா செய்தது தவறு என்று ரெட் கார்டு கொடுத்திருந்தார்கள். தற்போது இந்த காரணத்தை சொல்லி தான் அவருடைய மனுவும் நிராகரிக்கப்பட்டு இருந்தது. மேலும், இன்று சென்னையில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இதில் பல சின்னத்திரை நடிகர், நடிகைகள் வாக்களித்து இருக்கிறார்கள். ஆனால், நடிகை ரவீனாவை மட்டும் ஓட்டு போட அனுமதிக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக ஆதங்கத்தில் நடிகை ரவீனா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்.

ஓட்டு போட தடை:

அதில் அவர், எனக்கு ஒரு வருடத்திற்கு எந்த சீரியலிலும் நடிக்க கூடாது என்று ரெட் கார்டு கொடுத்திருக்கிறார்கள். எதற்காக எனக்கு ரெட் கார்டு கொடுத்தார்கள் என்று சரியான காரணமும் தெரியவில்லை. எனக்கு ரெட் கார்டு கொடுத்தது நியாயமே இல்லை. அந்த விவகாரத்தை பற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை. நான் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்தேன். ஆனால், என்னை ஓட்டு போடக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். சீரியலில் தான் நடிக்க கூடாது என்று சொன்னார்கள்.

https://www.youtube.com/watch?v=9a8OkXfkHNI

ரவீனா பேட்டி:

சங்கத்தில் வந்து நிற்கலாம், இதுபோன்ற யாருக்காவது ரெட் கார்ட் குறித்த பிரச்சனைகள் வந்தால் அதற்காக துணை நிற்கலாம் என்று ஒரு உறுப்பினராக இங்கு வந்தேன்.
ரெட் கார்டு கொடுத்ததால் உறுப்பினராக கூட வாக்களிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். தயாரிப்பாளர்களுக்கு என்னால் இழப்பீடு ஏற்பட்டதால் ரெட் கார்ட் கொடுத்துள்ளதாக கூறியிருக்கிறார்கள் தேர்தலில் நிற்காதவர்கள் ஓட்டு போட கூடாதா? அந்த உரிமை கூட எனக்கு இல்லையா? என்று தான் நான் கேட்கிறேன். தொழில் ரீதியாக தான் என்னை தடை செய்தார்கள். ஆனால், ஒரு உறுப்பினராக ஏன் என்னை ஓட்டுப் போட அனுமதிக்கவில்லை? ஓட்டுரிமையை ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.

தேர்தல் பற்றி சொன்னது:

இந்த மாதிரி தடை போட்டது பரத் மற்றும் அவர்களுடைய குழுவினர்கள் தான். ஆனால், நான் இங்கு வரும்போது என்னை கட்டி அணைத்து கண்டிப்பாக ஓட்டு போட்டு விடு என்று சொன்னார்கள். ஒரு பெண் தைரியமாக ஏதாவது ஒரு விஷயத்தை சொன்னால் உடனே அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து அவர்களை சில வருடங்களுக்கு தடை செய்து விடுகிறார்கள். என்னை தடை செய்து நான் சம்பாதிக்காமல் இருப்பது உங்களுக்கு சந்தோசமாக இருக்கிறது என்றால் சந்தோஷமாக இருந்து கொள்ளுங்கள் என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full