அடையாளம் தெரியாமல் படு குண்டாக மாறிய ரீமாசென்.! அதிர்ச்சி புகைப்படம் இதோ.!

By Ajju · 23/7/2018
நடிகை ரீமா சென் 1981ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கொல்கத்தாவில் பள்ளிப்படிப்பை முடித்த ரீமா சென் மும்பையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின்னர் மாடலிங் துறையில் சில காலம் இருந்தார் ரீமா சென். அதன்பின்னர், 2001ஆம் ஆண்டு மாதவனுக்கு ஜோடியாக மின்னலே படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு ரீமா சென்னுக்கு சிறந்த அறிமுக நடிகை விருது கிடைத்தது. அதன்பின்னர் பகவதி, தூள், செல்லமே, கிரி, திமிரு, வல்லவன் ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் நடித்தார். ரீமா சென் தமிழில் நடித்த கிட்டத்தட்ட அனைத்து படங்களுமே ஹிட் படங்கள் தான். கடைசியாக 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தில் நடித்தார். அதன்பின்னர் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால்.. கடந்த 2012ஆம் ஆண்டு சிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின் நடிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டார். இருவருக்கும் தற்போது ருத்ரவீர் சிங் என்ற 5 வயது குழந்தை உள்ளது.
behindtalkies AMP · Quick view
View full