பெரிய பட்ஜெட், பிரபல நடிகர்கள் படம்னாலே பெண் கதாபாத்திரம் இப்படி தான் இருக்கும் - நடிகை ரெஜினா ஓபன் டாக்

By subhashini · 10/2/2025

சினிமா அனுபவம் குறித்து நடிகை ரெஜினா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்தியா சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ரெஜினா. இவர் தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின்னர் இவர் அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார்.

அதன் பின் இவர் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவருக்கு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரெஜினா குறித்த தகவல்:

இருப்பினும் இவர் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார். சமீப காலமாக இவர் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் அஜித் நடித்த இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

விடாமுயற்சி படம்:

இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த அஜித்தின் விடாமுயற்சி படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று விடாமுயற்சி படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் வில்லனாக வரும் ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு மனைவியாக ரெஜினா நடித்திருக்கிறார். ரெஜினா சீன்கள் எல்லாம் பயங்கர மாஸாக இருக்கிறது. சொல்லப்போனால், ரெஜினாவின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெஜினா பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரெஜினா, பெரிய பட்ஜெட் படங்கள், முன்னணி நடிகர்களின் படங்களில் எல்லாம் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்கள் கொடுப்பதே கிடையாது.
அதோடு பெரிய படங்களில் எல்லாம் பெண் கதாபாத்திரங்களை ரொம்ப மோசமாக எழுதுகிறார்கள். இதனால் நான் நிறைய ஏமாந்து இருக்கிறேன். விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்குமார், இயக்குனர் மகிழ்திருமேனியுடன் சேர்ந்து வேலை செய்தது எனக்கு ஒரு உத்வேகம் கிடைத்தது.

https://www.youtube.com/watch?v=vkeq6EmUc9M

சினிமா அனுபவம்:

இந்த கதாபாத்திரத்தை என்ன தவிர வேற யாராலும் நடிக்க முடியாது என்று இயக்குனர் மகிழ்திருமேனி சொல்லியிருந்தார். இது எனக்கு ரொம்ப நம்பிக்கையை அளித்தது. ஒரு சிக்கல் ஆன கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று இயக்குனர் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. ஒரு படத்தில், பெண் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை பார்த்தாலே அந்த படத்தினுடைய கதையும் அதனுடைய வலிமையும் உணரலாம். அதனால் தான் நான் என் இயக்குனர்களை நம்புகிறேன். ஆனாலும், சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள். அதனால் தான் என்னிடம் சொல்லும் ஒவ்வொரு கதையிலும் ஒரு தனித்துவத்தை உணர்ந்து தான் அதில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full