பிரபல நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் முதியவர் பலி, போலீஸ் விசாரணையில் ரேகா நாயர் சிக்கினாரா?
பிரபல நடிகை ரேகா நாயரின் கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், பிரபல நடிகைகள் திரைத்துறையில் என்ன நடக்கிறது என்பதை மிகவும் வெளிப்படையாக பேசுவார்கள். அந்த வகையில் ஓப்பனாக பேசும் நடிகை தான் ரேகா நாயர். இவர் பல ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வந்த நிலையில் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.
கிடைக்கும் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தான் 'இரவின் நிழல்' படம் வந்தது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கும் பார்த்திபனின் இயக்கத்தில் வெளியான படம் இரவின் நிழல். இந்த படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக ரேகா நடித்திருந்தார். அது பெரிய சர்ச்சையாக மாறியது.
ரேகா நாயரும் சர்ச்சைகளும்:
குறிப்பாக திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் ரேகாவை தரக்குறைவாக பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதற்குப் பின் இருவருக்கும் வாக்குவாதம் மற்றும் பெரிய கலவரம் நடந்தது நாம் அறிந்ததே. இப்படி பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் ரேகா நாயரின் கார் மோதி ஒருவர் பலியாகி இருக்கும் செய்தி தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதியதில் 55 வயது மதிக்கத்தக்க மஞ்சன் என்பவர் உயிரிழந்திருக்கிறார்.
மதுபோதையில் உறங்கிக் கொண்டிருந்த மஞ்சன்:
சென்னை, ஜாபர்கான் பேட்டையில் உள்ள ஒரு தெருவில் மஞ்சன் மது போதையில், சாலை ஓரத்தில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் வேகமாக வந்த கார் மஞ்சன் மீது ஏறி இறங்கியது. அதனால் உயிருக்கு போராடியவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மஞ்சன் ஏற்கனவே உயிர் இழந்ததாக அங்கு தெரிவித்துள்ளார்கள்.
போலீஸ் விசாரணை:
அதனைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய காரை சிசிடிவி மூலம் கண்டுபிடித்து அங்கிருந்த போலீசார் விசாரணை செய்ததில் ஓட்டுநர் பாண்டி என்பவரை கைது செய்துள்ளார்கள். பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த கார் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் என தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து விபத்து நடைபெற்ற போது அந்தக் காரை இயக்கியது யார் என்பது போல் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
ரேகா நாயர் காரில் இருந்தாரா:
அதேபோல், விபத்தின் போது நடிகை ரேகா நாயர் காரில் இருந்தாரா என்று டிரைவர் பாண்டியிடம் விசாரித்து வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்து டிரைவர் பாண்டியிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நடிகை ரேகா நாயரின் காரை பறிமுதல் செய்து, அதே காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். தற்போது, இந்த செய்தி தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.