இப்ப தாங்க விவாகரத்து கொடுத்தேன், லிப்ஸ் சர்ஜரி பண்ணிட்டேனா? ரேஷ்மா பசுபலேட்டி எஸ்க்குளுசிவ்
“புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்து இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமானர். அதற்குப் பின்னர் இவர் சன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் ஒன்றான “வம்சம்” என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார். ஆனால், இவர் இதற்கு முன்பு தெலுங்கு சீரியலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இவருக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அந்த வகையில் இவர் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே இவர் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் சில படங்களில் நடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ரேஷ்மா குறித்த தகவல்:
அதை தொடர்ந்து இவர் சீரியல்கள் மற்றும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா அவர்கள் ராதிகா என்ற ரோலில் நடிக்கிறார்.
இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலின் மூலம் ரேஷ்மாவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார்.
ரேஷ்மா பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரேஷ்மா, பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி 4 வருடம் ஆகிவிட்டது. கேரக்டர் ரொம்ப பழகிவிட்டது. சீரியலில் இப்பதான் நான் கோபிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டேன். இப்போது அந்த சீரியலில் நான் எப்போவாவது தான் வருவேன். இன்னும் சீரியல் எத்தனை நாட்கள் போகும் என்று எங்களுக்கே தெரியவில்லை. கதையைப் பொறுத்த வரைக்கும் இப்ப நான் விவாகரத்து கொடுத்து விட்டேன், அவ்வளவுதான்.
சீரியல் பற்றி சொன்னது:
தற்போது நான் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு நன்றாக இருக்கிறது. இதில் எனக்கு கொஞ்சம் டஃப்பான ரோல் தான். கார்த்திக் சார் கூட நடிக்கிறேன். அதேபோல் வடிவுக்கரசி அம்மா கூட நிறைய காம்பினேஷன் வருகிறது. சில சீன்கள் அவரிடம் சொல்வதற்கே தயங்குவேன். இயக்குனர் தான் இது நடிப்பு தயங்காமல் சொல்லுங்கள் என்பார். மேடம் கூட நடிக்கிறது பெரிய விஷயமாக நினைக்கிறேன். அவர் ரொம்ப சாப்டான நபர். அது நிறைய பேருக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=eHmW90IAo1U
சர்ச்சைகளுக்கு பதிலடி:
பர்சனல் லைப்பில் என்னை வைத்து நிறைய விமர்சனங்கள் வருகிறது. நான் அதுக்கெல்லாம் பெருசாக எனர்ஜி கொடுப்பது கிடையாது. நம்ம ரியாக்ட் பண்ணுவதற்காக தான் அவர்கள் அப்படி நெகடிவ் கமெண்ட் பண்றாங்க. நான் அதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணுவது இல்லை. நான் லிப் சர்ஜரி எல்லாம் பண்ணவே இல்லை. சர்ஜரி பண்ற அளவுக்கு எனக்கு தைரியமும் கிடையாது. நம்ம லைஃபில் பாசிட்டிவ் ட்ரான்ஸ்பர்மேஷன்ஸ் எப்பவுமே கொடுத்துக் கொண்டே இருக்கணும். மீடியாவில் இருக்கும் போது நம்முடைய எதிர்காலத்திற்கு ஏற்ற மாதிரி அடாப்ட் பண்ணி கொள்ள வேண்டும். முன்னாடியெல்லாம் பியூட்டி பார்லர் மட்டும்தான் இருந்தது. இப்ப நிறைய ஸ்கின் கிளினிக் வந்துவிட்டது. செலிப்ரட்டிகள் தாண்டி மக்களும் நிறைய அந்த ட்ரீட்மென்ட் செய்து கொள்கிறார்கள். உங்க லைஃபை என்ஜாய் பண்ணி வாழுங்க என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.