நஸ்ரியா பகத் பாசிலை திருமணம் செய்ததற்கு நான் தான் காரணம்.! விஜய் பட நடிகை பேட்டி.!

By Rajkumar · 10/5/2019

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நஸ்ரியா. கடந்த 2014ஆம் ஆண்டு மலையாள நடிகர் பகாத் பாஸிலை திருமணம் செய்துகொண்டார் நஸ்ரியா. திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை அடியோடு நிறுத்துவிட்டார் நஸ்ரியா. 

தமிழில் மலையாள நடிகர் நிவின் பவுலி நடித்த 'நேரம் 'என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா. அதன் பின்னர் தமிழில் ராஜா ராணி, நையாண்டி, திருமணம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நஸ்ரியா, மலையாள நடிகர் பஹத்தை திருமணம் செய்துகொண்ட போது ரசிகர்கள் பலரும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தினார். இந்த நிலையில் நஸ்ரியா, பஹத்தை திருமணம் செய்திகொண்டதற்கு நான் தான் காரணம் என்று பிரபல நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.

மலையாளத்தில் கடந்த 2014 ஆம் வெளியான 'பெங்களூர் டேஸ்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்த சமயத்தில் பிஸியாக இருந்ததால் அந்த கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்க முடியாமல் போனதாம்.

எனவே, அந்த கதாபாத்திரத்தில் நஸ்ரியா கமிட் ஆனாராம். அந்த படத்தின் மூலம் தான் நஸ்ரியா- பஹத் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக நித்யா மேனன் கூறியுள்ளார். ஒரு வேலை தாம் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் நஸ்ரியாவிற்கு பஹத் மீது காதல் மலர்ந்திருக்காது. அவர்கள் திருமணத்திற்கு நான் தான் காரணம் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் நித்யா மேனன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full