வேறு ஜாதியாக இருந்தாலும் செல்வமணியை என் குடும்பம் ஏற்றுக்கொண்டதற்கு இதான் காரணம் - ரோஜா பகிர்ந்த லவ் ஸ்டோரி

By subhashini · 7/11/2023

தன்னுடைய 11 வருட காதல் கதை குறித்து ரோஜா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் அளித்த பேட்டியில் ரோஜா, என்னுடைய அப்பாவிற்கு சினிமாவில் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. பின் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். உண்மைய சொல்ல வேண்டும் என்றால் அவருக்காக தான் நான் படத்தில் நடித்தேன்.

செல்வா ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவர். என்னிடம் வந்து வசனங்களை சொல்லக்கூட தயங்குவார். இதனால் அவர் உதவி இயக்குனரோ அல்லது கேமரா மேன் மூலமாக தான் வசனங்களை சொல்லி தருவார். அதேபோல் என்னுடைய முதல் படமான செம்பருத்தி போது எனக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. அப்போது என்னிடம் வந்து பேச இவர் ரொம்ப வெட்கப்படுவார். அப்போதுதான் எனக்கும் அவருக்கும் காதல் உருவானது. எப்படி எங்களுக்குள் காதல் உருவானது என்று எங்களுக்கே தெரியவில்லை.

ரோஜா பேட்டி:

மேலும், நானும் அடிக்கடி பெருமாள் போட்டோ, பிரசாதத்தை எல்லாம் கொடுப்பேன். அதையெல்லாம் இவர் அவருடைய டேபிளில் பத்திரமாக வைத்திருந்தார். அப்போதே பலருக்கும் நாங்கள் காதலிக்கிறோம் என்று தெரிந்து விட்டது. செல்வா தான் என்னுடைய அப்பா, அம்மாவிடம் வந்து அவருடைய காதலை சொன்னார். என்னுடைய பெரிய அண்ணா தான் எங்களுடைய வீட்டினுடைய எல்லா முடிவுகளையும் எடுப்பார். அவரிடம் இந்த விஷயத்தை சொன்னபோது அவரும் ஒத்துக் கொண்டார்.

திருமணம் குறித்து சொன்னது:

அதற்கு காரணம், செல்வாவுடைய கேரக்டர் தான். எல்லாமே நன்றாக தெரிந்ததால் தான் ஒத்துக்கொண்டார்கள். சினிமா துறையில் இருந்து கொண்டு ஒருவர் இப்படி இருக்கிறாரா என்று எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் தான் வேறு ஜாதியாக இருந்தாலும் கூட பரவாயில்லை என்று கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். பின் நான் ஒரு தெலுங்கு பட சூட்டில் இருந்தபோது இவர் ஆர்கேஎஸ் என்ற ஒரு கோல்ட் செயினை கொண்டு வந்து எனக்கு ப்ரபோஸ் செய்தார். அதுமட்டுமில்லாமல் என்னுடைய மொத்த குடும்பத்தையும் நான்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ரோஜா காதல் கதை:

அதோடு பொருளாதார ரீதியாகவும் நான் கொஞ்சம் கஷ்டத்தில் இருந்தேன். இதனால் இவர் ஒரு படத்தை இயக்கி அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை என்னுடைய குடும்ப பிரச்சனைக்கு கொடுக்கலாம் என்று யோசித்து இருந்தார். ஆனால், அந்த படம் தோல்வி அடைந்தது. அதில் பட்ட கடனை நான் அடைப்பதற்கு கிட்டத்தட்ட 11 வருடங்கள் சினிமாவில் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த சமயத்தில் எனக்கு செல்வாவும் உறுதுணையாக இருந்தார். பின் நாங்கள் 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். எங்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக தான் சென்று கொண்டிருக்கின்றது. என்னுடைய கணவர் பெரியாரிஸ்ட்.

ரோஜா திரைப்பயணம்:

எப்போதும் பெண்களுக்கு சம அளவில் மரியாதை கொடுப்பார். அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறி இருந்தார். தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் “செம்பருத்தி” படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார். பின் சில ஆண்டு காலாகவே ரோஜா நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full