நடிகை ரோஜாவின் மகளா இது ? யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

By Ajju · 6/3/2018
நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழில், 1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். அதன்பின்னர், 1.சூரியன் 2.உழைப்பாளி 3.அதிரடி படை 4.வீரா 5.அசுரன் மக்கள் 6.ஆட்சி ராஜாலி 7.அடிமை சங்கிலி 8.என் ஆசை ராசாவே 9.ஊட்டி, போன்ற பல ஹிட் படங்களில் நடித்தவர். இவர், கடந்த 2002ஆம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.மகள் அன்ஷு மாலிகாவிற்கு தற்போது 15 வயதாகிறது. இவர் பாடல் மற்றும் நடனம் கற்றும் வருகிறார். பள்ளி படிப்பை முடித்தவுடன் சீக்கிரத்தில் இவரும் தன் அம்மாவை போலவே நடிக்க வருவார். ரோஜா தற்போது நடிப்பதை நிறுத்திவிட்டு, அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்து தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full