23 வருட சினிமா வாழ்க்கை, அரசியல் - தலைசுற்ற வைக்கும் ரோஜாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?

By subhashini · 4/12/2023

நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் பொலிடிகல் சயின்ஸ் படித்து முடித்து இருக்கிறார். இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு குச்சி பிடி நடன கலைஞராக தான் இருந்தார். பின் 1991 ஆம் ஆண்டு பிரேம தப்பாஸு என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் இவர் நடிகையானார்.

அதற்கு பின் தான் இவர் தமிழில் செம்பருத்தி படத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து இவர் சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், பிரபு, சரத்குமார் என்று பல நடிகர்களின் படங்களிலும் நடித்து இருந்தார்.

ரோஜா திரைப்பயணம்:

அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார். இளம் வயதிலேயே ரோஜா படு கிளாமராகவும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணசித்திர வேடங்களில் நடித்து இருந்தார். பின் சில ஆண்டு காலாகவே ரோஜா நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார்.

ரோஜா அரசியல்:

தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு. ரோஜா அந்த பகுதி மக்களின் கல்வி,மருத்துவ உதவி என பல விஷயங்களை செய்து அசத்தி இருக்கிறார். தற்போது ரோஜா அவர்கள் ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார். இதனிடையே இவர் கடந்த 2002 ஆம் தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆன ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரோஜா குடும்பம்:

இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள். மேலும், ரோஜா நகரி பகுதி அமைச்சராக இருப்பதால் அங்கேயே இருந்து மக்களின் கோரிக்கையை கேட்க வேண்டும் என்பதற்காக புதிய வீடொன்று கட்டி இருக்கிறார். பின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோஜாவை ஒரு ஆபாச நடிகை என்ற விமர்சித்து சந்திரபாபு நாயுடு கட்சி பேசியிருந்ததெல்லாம் சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பலருமே ரோஜாவிற்கு குரல் கொடுத்து பேசி இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=3ajtXXH7Koc

ரோஜா சொத்து மதிப்பு:

இந்த நிலையில் நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் வைரலாகி வருகிறது. நடிகை ரோஜாவின் மொத்த சொத்து மதிப்பு 80 கோடி. இவருக்கு ஹைதராபாத் மற்றும் சென்னையில் அரண்மனை போல வீடு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் நடிகை ரோஜா தன்னுடைய ஹோம் டூர் பதிவிட்டிருந்தார். அதை பார்த்து பலருமே ஆச்சரியப்பட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஆடம்பரமாக அவருடைய வீடு இருந்தது. அது மட்டும் இல்லாமல் இவருக்கு சொகுசு கார்களும் இருக்கிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full