தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் நடிகை தன்ஷிகா. இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான திருடி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகில் நுழைந்தார். பிறகு எஸ்.பி. ஜனார்தனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளி வந்த “பேராண்மை” படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார் தன்ஷிகா. அதற்கு பிறகு நடிகை தன்ஷிகா மாஞ்சா வேலு ,நில் கவனி செல், அரவான், பரதேசி, யாயா, திரந்திடு சீசே, கபாலி, எங்க அம்மா ராணி, உரு, சோலோ, விழித்திரு, காத்தாடி, கல்லக்கூத்து போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

சமீபத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான ‘இருட்டு’ படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தன்ஷிகா. இந்நிலையில் நடிகை தன்ஷிகா நடித்து வரும் கிட்னா படத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி இயக்கி வரும் படம் தான் கிட்னா. இந்த படத்தை தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் எடுக்க இருப்பதாக சமுத்திரக்கனி கூறி இருந்தார். அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக தன்ஷிகா நடிக்க இருக்கிறார்.

Advertisement

மேலும், அரவான், பரதேசி படங்களுக்கு பிறகு நடிகை தன்ஷிகா அவர்கள் பக்கா கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அரவான், பரதேசி படத்தில் இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. இந்த படத்தில் பல வித்தியாசங்களை சமுத்திரக்கனி காட்டப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கபாலி படத்தின் போதே கிட்னா படத்தின் வேலைகள் தொடங்கியது. ஆனால், ரஜினியின் கபாலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் தலை முடியைக் கத்தரித்துக் கொண்டு தன்சிகா நடித்து இருந்தார்.

அந்த படத்திற்கு பிறகுதான் சமுத்திரகனியின் கிட்ணா படத்தில் நடிக்க திட்டமிட்டு இருந்தார். பிறகு தலை முடி வளர்ந்த பிறகு படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கூறியிருந்தார். காலம் தள்ளிப் போனதால் கிட்னா படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதில் பார்ப்பதற்கு தன்ஷிகா அவர்கள் முரட்டுத்தனமான கிராமத்து பெண்ணாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்படும்.

Advertisement
Advertisement