அந்த அவமானத்தால் நான் ஒரு வாரம் வெளியே போகவில்லை - சாய் தன்ஷிகா ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தன்ஷிகா. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் மேடையில் தன்ஷிகாவை, டி.ராஜேந்திரன் அழ வைத்து கஷ்டப்பட வைத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தன்ஷிகா நடித்த விழித்திரு படத்தினுடைய விழாவில் டி ராஜேந்திரன் அவர்கள் கலந்து இருந்தார்.
அப்போது விழாவில் தன்ஷிகா அவர்கள் டி ராஜேந்திரன் பெயரை சொல்ல மறந்து இருக்கிறார். பின் விழாவில் பேசிய டி.ராஜேந்திரன், சினிமா இப்போது மோசமாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக ஒரு பாடல் எழுதி பாடி நடனமாடி இருக்கிறேன். கதை பிடித்ததால் தான் நடித்தேன். தன்ஷிகாவை கபாலி படத்தின் நாயகி என்று சொன்னார்கள். பெரிய படத்தில் நடித்தால் பெரிய நடிகை என்று நினைக்கக் கூடாது. தன்ஷிகாவிற்கு மேடை நாடக நாகரிகமே தெரியவில்லை.
டி.ராஜேந்திரன் செய்தது:
ரஜினி கூட நடித்தால் இந்த டி.ஆர் பெயர் தெரியாதா? மரியாதை இல்லாமல் நடந்து கொள்வதா?என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். உடனே தன்ஷிகா குறுக்கிட்டு பெயரை சொல்லாமல் விட்டதற்கு மன்னிப்பு கேட்டார். இருந்தாலுமே டி. ராஜேந்தர் விடாமல் தன்ஷிகாவை அவமரியாதையாகவே மேடையில் பேசி இருந்தார். இதனால் தன்ஷிகா மேடையிலேயே கண் கலங்கி கொண்டு அங்கிருந்து சென்றிருந்தார்.
https://www.youtube.com/watch?v=WdRVjmf5H2g
தன்ஷிகா பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை தன்ஷிகா, அந்த மேடையில் அவர் பெயரை நான் சொல்ல மறந்து விட்டேன். ஆனால், டிஆர் அப்படி பேசியது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்த மேடையில் யாரும் எனக்காக பேசவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு வாரம் நான் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தேன். அது மட்டும் இல்லாமல் அந்த நேரத்தில் எனக்கு உடம்பும் சரியில்லாமல் இருந்தது.
தன்ஷிகா விளக்கம்:
எல்லோருக்குமே ஒரு கருத்து இருக்கும். ஆனால், அது மத்தவர்களை காயப்படுத்துமா? இல்லையா? என்று யாருக்கும் புரியவில்லை. நிறைய பேர் நான் பப்ளிசிட்டிக்காக பண்ணேன் என்று சொல்கிறார்கள். அப்படி பப்ளிசிட்டிக்காக பண்ணி இருந்தால் நான் ஒரு வாரம் என் வீட்டில் இருந்து இருக்க வேண்டாம். பத்திரிகையாளர்களை அழைத்து இது நியாயம்? அநியாயம்? என்றெல்லாம் பேசி பிரபலத்தை தேடி இருப்பேன். அந்த மாதிரி செய்ய எனக்கு விருப்பமில்லை என்று கூறியிருந்தார்.