பெண் கதாபாத்திரங்களை சேகர் காரு இப்படி தான் வடிவமைப்பார் - சாய் பல்லவி சொன்ன விஷயம்

By subhashini · 20/6/2025

குபேரா படம் பற்றி நடிகர் சாய் பல்லவி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் குபேரா. இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தனுஷின் நடிப்பும் இயக்குனர் உடைய வேலைப்பாட்டையும் பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் குபேரா படக்குழுவினரை பாராட்டி நடிகை சாய் பல்லவி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

குபேரா படம்:

அதில் அவர், குபேரா படம் சிறப்பாக இருக்கிறது. இந்த படம் சிறப்பாக இருக்க பல காரணங்கள் இருக்கின்றது. தனுஷ் சார் மாஸ்டர் கிளாஸ். சவாலான கதாபாத்திரங்களை கூட இயல்பாக நடித்து காட்டக்கூடிய திறமை கொண்டவர். சேகர் காரு இயக்கத்தில் நாகர்ஜுனா காருவை கொலையாளி கதாபாத்திரத்தில் பார்ப்பது ஒரு விருந்தாக இருக்கிறது. சேகர் காரு பெண் கதாபாத்திரங்களை எவ்வளவு சக்தி வாய்ந்ததாகவும் தனித்துவமாகவும் எழுதி இருக்கிறார் என்பது நமக்கே தெரியும்.

சாய் பல்லவி பதிவு:

ராஷ்மிகா அற்புதமாக நடித்திருக்கிறார். இது உங்கள் வெற்றி தொடரில் ஒரு மறக்க முடியாத கதாபாத்திரமாகவும் பிரம்மாண்டமான வெற்றியாகவும் இருக்கும். சேகர் காரு, நீங்கள் ஒரு தலைமுறையை ஊக்குவிக்கிறீர்கள். நானும் அதில் ஒருவர். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இதுபோன்று பல கதைகளை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்கள் அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் பிரார்த்திக்கிறேன். படம் அருமையாக இருக்கிறது. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்.

படத்தின் கதை:

படத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் நீரஜ் க்ளோபல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் பல லட்சம் கோடி மதிப்பில் ஆன எண்ணைய் மற்றும் எரிவாயு ஒப்பந்தத்தை கைப்பற்ற திட்டம் போடுகிறார். பின் நீரஜ், இந்த திட்டத்தை தன்னுடைய பெயரிலோ, நிறுவனத்தின் மூலமோ செய்யக்கூடாது என்று நாகார்ஜுனாவை வைத்து செய்ய திட்டம் போடுகிறார். நாகர்ஜுனா முன்னாள் சிபிஐ
அதிகாரியாக இருந்தவர். இவர் சிறையில் இருக்கிறார்கள். நேர்மையாக இருந்துமே அரசாங்கம் தனக்கு குற்றவாளி பட்டம் சுமத்தியதால் அவருக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. இதனால் இவர் நீரஜினுடைய திட்டத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.

பின் நீரஜ் ஒரு லட்சம் கோடியில் 50 ஆயிரம் கோடி கருப்பு பணமாகவும் மீதி வெள்ளை பணமாகவும் தர வேண்டும். இதில் எனக்கும் என்னுடைய நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார். அதற்கு நாகர்ஜுனா இதை பினாமி மூலம் செய்கிறார். அதற்காக இவர் பிச்சைக்காரர்களை வைத்து பரிவர்த்தனை நடத்துகிறார். மேலும், பணம் கை மாறிய பிறகு அந்த பிச்சைக்காரர்களையும் கொன்று விடுகிறார்கள். அப்படி தான் இந்த இந்த பிரச்சினையில் தனுஷும் சிக்கிக் கொள்கிறார். ஊர் முழுவதுமே தனுஷை சல்லடை போட்டு தேடுகிறார்கள். இதற்கு இடையில் தனுஷ், ராஸ்மிகாவை சந்திக்கிறார். இறுதியில் தனுஷ் என்ன ஆனார்? கோடிக்கணக்கான பணம் கைமாற்றப்பட்டதா? ராஸ்மிகா நிலை என்ன? நாகார்ஜுனா என்ன செய்தார்? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

behindtalkies AMP · Quick view
View full