நயன், திரிஷா இல்லை - சிறந்த நடிகைகள் இவங்க தான், சமந்தா சொன்னது யார் தெரியுமா?

By subhashini · 25/2/2025

சிறந்த நடிகைகள் பற்றி நடிகை சமந்தா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடந்த ஆண்டு தான் சமந்தா மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாலிவுட் வெப் தொடரில் நடித்திருந்தார்.

சமந்தா திரைப்பயணம்:

பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்திருந்தார். இந்த வெப் சீரியஸ் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருந்தது. இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸை எடுத்திருந்தார். இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சமந்தா படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

ரசிகர்களின் கேள்வி:

இது ஒரு பக்கம் இருக்க சமந்தா எப்போதுமே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் அடிக்கடி சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் instagram பக்கத்தின் ஸ்டோரில் ask me everything என்ற தலைப்பில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர், சினிமா திரையில் சிறந்த நடிகைகள் யார்? என்று கேட்டிருக்கிறார்கள்.

சமந்தா சொன்ன பதில்:

அதற்கு சமந்தா, நடிகை பார்வதி திருவோத்து, நஸ்ரியா, சாய் பல்லவி, ஆலியா பட், அனன்யா பாண்டே என பலர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த நடிகைகளுடைய வேலையெல்லாம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இவர்களெல்லாம் ரொம்ப கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார்கள். யாருக்குமே இது சாதாரண விஷயம் கிடையாது. இந்த ஆண்டில் அடுத்தடுத்து வர இருக்கும் பல நடிகைகளுடைய பர்பாமென்ஸுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

சமந்தா திருமணம்:

இதற்கிடையில் சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நாக சைதன்யாவுக்கு கடந்த ஆண்டுக இறுதியில் தன திருமணம் நடந்தது.

behindtalkies AMP · Quick view
View full