சமந்தா உடைய ஒரு ப்ராவின் விலை குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை கேட்ட ரசிகர்கள் பலரும் வாயை பிளந்து உள்ளார்கள். தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணத்திற்கு பின் சமந்தா படங்களில் நடித்து வந்தார். அதோடு இருவரும் சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.

Advertisement

சமந்தா- நாக சைதன்யா பிரிவு:

இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்த பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இருந்த புஷ்பா படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலின் மூலம் சமந்தா ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம். இதைத் தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படத்திலும் குத்தாட்டம் போட சமந்தா கமிட்டாகி இருக்கிறார்.

சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள படங்கள்:

பின் இவர் காத்துவாக்குல 2 காதல், திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம் போன்று பல படத்தில் சமந்தா நடித்து வருகிறார். சமீபத்தில் சமந்தா நடித்து வரும் சாகுந்தலம் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தை குணசேகர் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. அதோடு இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது.சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சமந்தா பிரம்மிக்க வைக்கும் அழகில் இருக்கிறார்.

Advertisement

சமந்தா நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து சமந்தா அவர்கள் யசோதா என்ற படத்தில் சமந்தா வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் வரலட்சுமி முரளி சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படி தொடர்ந்து பல படங்களில் சமந்தா மிரட்டிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் சமந்தாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. பிரிவுக்குப் பிறகு சமந்தா அவர்கள் அரைகுறை உடையில் நடித்து வருகிறார். அதிலும் சமீப காலமாகவே படுகவர்ச்சியாக கவர்ச்சியான உடைகளில் சமந்தா காட்சி தருகிறார். மேலும், அந்தப் புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

Advertisement

சமந்தா ப்ராவின் விலை:

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது சமந்தா படுகவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில், சமந்தா உடைய ப்ரா குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஒரு ப்ரா இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 40,000 ரூபாய். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அடேங்கப்பா! என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Advertisement