நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா? வைரலாகும் போட்டோ
நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா? வைரலாகும் போட்டோ
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. மாடலிங்கில் 500 ரூபாய் சம்பளத்தில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய சமந்தா தற்போது பல கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தா அவர்கள் மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இவரே தயாரிக்கிறார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். நேற்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றியை சமந்தா திரையரங்கிற்கு வெளியே கொண்டாடி இருக்கிறார்.
சமந்தா படம்:
படத்தை பார்த்துவிட்டு பட குழுவினுடன் சேர்ந்து சமந்தா கேக் கொண்டிருக்கிறார். அந்த கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை எல்லாம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சமந்தா பார்ப்பதற்கு கர்ப்பமாக இருப்பது போலவே தெரிகிறது. பேபி பம்ப் எல்லாம் தெரிகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சமந்தாவிற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
சமந்தா கர்ப்பம்:
சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். பின் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் இருவரும் காதலிப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால், இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை.
சமந்தா திருமணம்:
இதனால இவர்கள் இருவருடைய உறவு பற்றி சோசியல் மீடியாவில் காட்டு தீயை போல ஏதாவது ஒரு செய்தி வந்தது. மேலும், சமந்தாவுக்கும் ராஜ் நிடிமோருவுக்கும் கோவையில் உள்ள ஈசா யோகா மையத்தில் தான் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இது இவர்கள் இருவருக்கும் இரண்டாவது திருமணம். இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்கள். இதை பார்த்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.