சமந்தாவின் 2வது திருமணம் போட்டோ.! அவரே போட்ட பதிவு.! புகைப்படம் இதோ

By Ajju · 30/7/2018
நடிகை சமந்தா, தென்னிந்திய சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்கு பிறகும் எந்த வித தடையுமின்றி சினிமாவில் நடித்து வருகிறார். [embed]https://twitter.com/allusumanth32/status/1023401158843355136[/embed] திருமணத்திற்கு பின்னரும் தனது மார்கெட்டை பிஸியாக வைத்து வரும் அம்மணி தற்போது சிவகார்த்திகேயனுடன் 'சீமாராஜா ' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ள 'யூ டர்ன் ' என்ற படத்திலும், நடிகர் விஜய் சேதுபதியுடன் "சூப்பர் டீலக்ஸ் " என்ற படத்திலும் நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக இருந்து வந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் விசிட் அடித்து விடுவார் நடிகை சமந்தா. அது போன்று சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் நடிகை சமந்தா. அப்போது ட்விட்டர் வாசி ஒருவர் நடிகை சமந்தா வேறு ஒரு நபருடன் மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். [embed]https://twitter.com/Samanthaprabhu2/status/1023408544660373504[/embed] போட்டோ ஷாப் செய்யப்பட்டிருந்த அந்த புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா நடிகை சமந்தா ' கடந்த வாரம் ஓடிப் போய்விட்டோம். இது எப்படி லீக்கானது என்று தெரியவில்லை. இது கண்டதும் காதல்' என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம், 'போட்டோ ஷாப்பாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ?
Tamil Behind Talkies AMP · Quick view
View full