அதுதான் அவர் செய்ததிலேயே பெஸ்ட்- முன்னாள் கணவர் குறித்து மனம் திறந்த நடிகை சமந்தா
நாக சைதன்யா குறித்து சமந்தா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அதோடு கடந்த சில வருடங்களாகவே சமந்தாவை குறித்து ஏதாவது ஒரு செய்திகள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் கூட சில நாட்களாகவே சமந்தா சொன்ன மருத்துவ குறிப்புக்கு பலருமே எதிர்ப்பு கூறியும் கண்டனம் தெரிவித்தும் இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமந்தா தன்னுடைய கணவர் குறித்து பேசியிருந்த பழைய பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
சமந்தா வீடியோ:
அதில் நீங்கள் நாக சைதன்யாவிடம் பெற்ற சிறந்த பரிசு என்ன? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு சமந்தா, எனக்கு பிடித்த பழமொழி ஒன்றை அவர் கையால் எழுதி வரைந்த ஒரு பையை பரிசளித்து இருந்ததார். அதுதான் என்னுடையகணவர் எனக்கு கொடுத்த சிறந்த பரிசு என்று கூறியிருந்தார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
சமந்தா திருமணம்:
இதனிடையே சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா, நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.
சமந்தா விவாகரத்து:
இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது. இருந்தாலும், இருவருமே அதை கண்டுகொள்ளவில்லை. மேலும், சமந்தா பிரிவிற்கு பின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இது ஒருபுறம் இருக்க, கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.
சமந்தா திரைப்பயணம்:
இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். பின் கடந்த ஆண்டு அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருந்ததால் இவர் தான் நடிக்க ஒப்புக்கொண்ட படத்திற்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலகி இருந்தார் சமந்தா. தற்போது இவர் பூரணமாக குணமடைந்து ஆரோக்கியமான உடல் நலத்துடன் மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.