தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஓ பேபி திரைப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அம்மணிக்கு தமிழில் தான் இன்னும் வாய்ப்பு வரவில்லை. தமிழில் விஜய்சேதுபதி – திரிஷா நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான 96 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆனது. அங்கும் நல்ல வசூல் செய்தது. இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில் “ஜானு” என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தனும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்து உள்ளனர். இந்த 96 படத்தை எடுத்த பிரேம் குமார் தான் ஜானு படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த ஜானு படம் குறித்து சமந்தா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் சமந்தா கூறியது,

Advertisement

96 படத்தில் விஜய் சேதுபதியை விட திரிஷா நடித்த கதாபாத்திரம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த படம் தமிழில் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் என்னை நடிக்க தேர்வு செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டும் தான் நடிப்பேன் என்று நினைக்கிறேன். அதற்கு பிறகு சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். ஏனென்றால் எனக்கு ஒரு குடும்பம் இருப்பதால் தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

நான் நடிப்பதை விட்டாலும் ஏதோ ஒரு வகையில் சினிமாவுடன் எனக்கு தொடர்பு இருக்கும். பொதுவாகவே நடிகைகளுக்கு சினிமாவின் ஆயுள் குறைவு தான். சில காலம் மட்டும் தான் நடிகைகள் சினிமாவில் வலம் வர முடியும். சினிமாவில் இருந்து விலகியதும் ரசிகர்களும் அவர்களை மறந்து விடுவார்கள். நான் சினிமாவில் இருந்து விலகினாலும் ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு படத்தில் நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அது தான் இந்த ஜானு படம். இந்த படம் மூலம் ரசிகர்கள் என்னை எப்போதும் மறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

Advertisement

எனக்கு ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் மக்கள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்று ஒரு பதட்டத்துடன் இருப்பேன். படங்களில் என்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் சிறப்பானதாக இருந்தால் மட்டும் தான் நடிப்பேன். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு என்னுடைய கதாபாத்திரம் பிடிக்கனும். இது இரண்டையும் கருத்தில் கொண்டு தான் படங்களில் நடிப்பேன். இந்த இரண்டு, மூன்று வருடங்களில் என்னால் முடிந்த சிறந்த கதாபாத்திரங்களை மக்களுக்கு கொடுப்பேன் என்று கூறினார்.

Advertisement
Advertisement