பணம், புகழுக்காக மட்டும் தான் ஓடி கொண்டு இருந்தேன், ஆனா இப்போ - நடிகை சமந்தா பளீச் பதில்

By subhashini · 16/6/2026

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தா அவர்கள் மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை இவரே தயாரிக்கிறார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இந்த படம் வருகிற 19ஆம் தேதி திரைக்கு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் காண ப்ரமோசன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகை சமந்தா, சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் ஒரு சாதாரண பெண்ணான எனக்கு இவ்வளவு பெரிய ஸ்டார்டம் கிடைத்தது ரசிகர்கள் திரையில் என் பெயரை பார்த்து கத்துவதும் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

சமந்தா குறித்த தகவல்:

அந்த அதிர்ச்சி தான் என்னை அடுத்தடுத்து ஓட வைத்தது. ஒரு கட்டத்தில் சினிமா எனக்கு ஒரு போதையாகவே மாறிவிட்டது. ஒரு வருடத்தில் அடுத்தடுத்த நடித்த ஐந்து,ஆறு படங்களும் ஹிட்டானதால் என்னை அதிர்ஷ்ட கால் கொண்டவர் என்று பாராட்டினார்கள். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் தான் திறமையை வளர்த்துக் கொள்வதைப் பற்றி யோசிக்காமல் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளோடு மட்டுமே நான் திருப்தி அடைந்தேன். என்னுடைய திரை ஓட்டத்தில் நான் பெருமைப்பட முடியாத பல படங்களில் நடித்திருக்கிறேன்.

சமந்தா பேட்டி:

மேலும், 2012 ஆம் ஆண்டிலேயே என்னுடைய திரை பயணம் தொடங்கி 15 நாட்களிலேயே உடல்நிலை குறைவால் நான் படுக்கையில் விழுந்துவிட்டேன். ஆனால், அந்த முதல் இடைவெளியில் இருந்து நான் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பிறகும் ஆண்டிற்கு ஐந்து முதல் ஆறு படங்கள் என தொடர்ந்து ஓடிக்கொண்டே தான் இருந்தேன். அப்போது நான் வசூலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தேன். நான் திரைத்துறையில் மிக கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இந்த இரண்டாவது இடைவெளி வந்தது.

சினிமா அனுபவம்:

நடிகர்களாக இருக்கும் போது நமக்கு ஓய்வு கிடையாது என்ற ஒரு அகம்பாவம் வந்துவிட்டது. ஆனால், இந்த நோய் பாதிப்பு என்னுடைய எண்ண ஓட்டத்தை முழுமையாக மாற்றியது. மீண்டும் சினிமாவுக்கு திரும்பினால் பழைய வாழ்க்கை மாதிரி இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதன் பிறகு பிராண்டுகள், திரைப்படத்திலிருந்து எல்லாவற்றையும் மாற்றி கொண்டேன். சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளேன். இப்போ என்னுடைய வாழ்க்கை ஒரு தெளிவான நோக்கத்துடன் வாழ்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full