இனி மறைக்க ஒன்றுமில்லை, நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் வீடியோ வைரல் - என்ன தெரியுமா?

By subhashini · 7/6/2025

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார். இது நாம் அனைவரும் பட்டு ஒன்று தான்.

இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடந்த ஆண்டு தான் சமந்தா மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சமந்தா பாலிவுட் வெப் தொடரில் நடித்திருந்தார். பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்திருந்தார்.

சமந்தா திரைப்பயணம்:

இந்த வெப் சீரியஸை ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருந்தது. இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸை எடுத்திருந்தார். இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சமந்தா படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சமந்தா அவர்கள் தயாரிப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் சமந்தா தயாரிப்பில் சமீபத்தில் இந்த படம் வெளியாகி இருந்தது.

சமந்தா டாட்டூ:

இப்படி இருக்கும் நிலையில் நாக சைதன்யா தொடர்பான டாட்டூவை சமந்தா நீக்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமந்தாவுடைய முதுகில் 'யே மாய சேசாவே' (YMC) என்ற டாட்டூ போடப்பட்டிருந்தது. இந்த படத்தில் தான் நாக சைதன்யா- சமந்தா இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள். அதோட இந்த படத்தின் போது தான் இருவருக்கும் இடையே காதலும் மலர்ந்தது. அதன் ஞாபகமாகத்தான் சமந்தா இந்த டாட்டூவை போட்டிருந்தார்.

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

சமந்தா லேட்டஸ்ட் போஸ்ட்:

பின் இவர்கள் இருவரும் பிரிந்து விவாகரத்து வாங்கியும் சமந்தா அந்த டாட்டுவை நீக்காமல் வைத்திருந்தார்.
தற்போது அந்த டாட்டூவை சமந்தா நீக்கி இருக்கும் வீடியோ தான் வைரலாகி வருகிறது. தன்னுடைய பழைய நினைவுகளை எல்லாம் மறந்துவிட்டு சமந்தா புதிய வாழ்க்கையை நோக்கி நகர்கிறார் என்றெல்லாம் ரசிகர் கூறுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சமந்தா, தன்னுடைய நிச்சயதார்த்த மோதிரம், திருமண ஆடைகள் அனைத்தையும் மாற்றி இருக்கிறார்.

சமந்தா குறித்த தகவல்:

மேலும், நடிகை சமந்தா அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இணையத்தில் பேச்சுகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றது. இவர் இயக்குனர் ராஜ் நிதி மோருவை தான் காதலிப்பதாகவும் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது தொடர்பாக செய்திகள் வந்தாலுமே சமந்தா அமைதியாக தான் மௌனம் காத்துதான் வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full