13 வருடங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்கும் நடிகை சமீரா ரெட்டி - எந்த படம் தெரியுமா?
மீண்டும் நடிகை சமீரா ரெட்டி படத்தில் நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சமீரா ரெட்டி. இவர் பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ" என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்ற வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின் இவர் தமிழில் வெடி, வேட்டை, அஜித் உடன் அசல் போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை நடிகை சமீரா ரெட்டி திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர் முழு கவனமே குடும்பத்தில் செலுத்தி வந்தார். தற்போது சமீராவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
சமீரா ரெட்டி குறித்த தகவல்:
மேலும், சமீரா நடிப்பிலிருந்து முழுவதும் குட் பை சொல்லிவிட்டார். சமீரா சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் தன் குழந்தைகளுடன் விளையாடும் வீடியோ, புகைப்படம் என்று அனைத்தையும் பகிர்ந்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீரா ரெட்டி மீண்டும் நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மீண்டும் நடிக்கும் சமீரா:
அதாவது இவர், சிம்னி என்ற படத்தின் மூலம் தான் மீண்டும் பாலிவுட்டில் நடிக்க களம் இறங்கி இருக்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சமீரா ரெட்டி, ஒரு வருடத்திற்கு முன்பு நான் நடித்த டெஸ் படத்தை என்னுடைய மகன் பார்த்தான். அதனை பார்த்துவிட்டு என் மகன், அம்மா ஏன் நீங்கள் மீண்டும் நடிக்கவில்லை என்று கேட்டான். அதற்கு நான், உன்னையும் உன்னுடைய சகோதரியையும் கவனித்துக் கொள்வதால் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று சொன்னேன்.
சமீரா பேட்டி:
அதற்கு என் மகன் ,நீங்கள் மீண்டும் நடிப்பதை பற்றி யோசித்துப் பாருங்கள் என்று சொன்னான். அவன் சொன்ன பிறகுதான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது எனக்கு பதட்டமாக இருந்தது. அங்கிருந்தவர்கள் உங்களுக்கு வயதாகி விட்டது என்றெல்லாம் சொன்னார்கள். அதற்கு நான், எனக்கு என்ன வயதாகி விட்டது என்று திருப்பி கேட்டேன். ஆனால், இயக்குனர் ஆக்சன் என்று சொன்னவுடன் என்னுள் உறங்கிக் கொண்டிருந்த நடிகர் மீண்டும் எழுந்து விட்டான்.
நடிப்பது பற்றி சொன்னது:
இயக்குனர் சொன்னபடியே நடித்தேன். மேலும், நான் என்னுடைய குடும்பத்துடன் 2020 ஆம் ஆண்டு கோவாவிற்கு சென்றுவிட்டேன். அங்க போன பிறகு தான் எனக்கு மன அமைதி வந்தது. என்னுடைய வாழ்க்கையிலும் மாற்றம் வந்தது. இப்போது மன அழுத்தம் இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறேன். கோவாவில் இருப்பது ரொம்ப வசதியாக இருக்கிறது. ஒரு தாயாக என்னையும் என்னுடைய குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுதான் முக்கியம். எல்லோருமே என்னிடம் ஏன் கோவாவிற்கு சென்றீர்கள் என்று கேட்கிறார்கள். என் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக இதை செய்தேன். மன அமைதிக்காகவே கோவாவிற்கு வந்தேன் என்று கூறியிருக்கிறார்.