சொந்த வீடியோ கேமில் வீரமங்கையாக வரும் நடிகை சமீரா ரெட்டி - வெளியான சுவாரசிய தகவல்
நடிகை சமீரா ரெட்டி சொந்தமாக வீடியோ கேம் வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சமீரா ரெட்டி. இவர் சினிமாவை தாண்டி வீடியோ கேமில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக தோன்றி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, 2006 ஆம் ஆண்டில்
‘சமீரா: வாரியர் பிரின்ஸஸ்’ என்ற வீடியோ கேம் வெளியாகியிருந்தது.
இது சமீரா ரெட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள வீடியோ கேமில் இதுவும் ஒன்று. இதில் சமீராவின் கதாபாத்திரம் ஒரு வீரமங்கையாக உருவாக்கப்பட்டிருந்தது. சாகசம், ஆக்சன் நிறைந்த கதைக்களத்தில் இந்த வீடியோ கேம் இருந்தது. மொபைல் மற்றும் பிற கேமின் தளங்களில் இந்த கேம் வெளியாகியிருந்தது. இளைஞர்கள் மத்தியிலும் இந்த கேம் நல்ல வரவேற்பு பெற்றது.
சமீரா பேட்டி:
மேலும், இது தொடர்பாக அளித்த பழைய பேட்டியில் சமீரா, என்னுடைய கதாபாத்திரத்தை ஒரு வீடியோ கேமில் பார்ப்பது மறக்க முடியாத அனுபவம். இந்தியாவில் இதுபோன்ற புதுமையான முயற்சியில் பங்கேற்றது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை அளிக்கிறது என்றெல்லாம் கூறியிருந்தார். தற்போது இந்த வீடியோவை மீண்டும் இணையத்தில் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அதோடு சொந்த வீடியோ கேமை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை சமீரா ரெட்டி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீரா கேம் வீடியோ:
மேலும், சமீரா அவர்கள் பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ' என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்ற வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் இவர் தமிழில் வெடி, வேட்டை, அஜித் உடன் அசல் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
சமீரா ரெட்டி குறித்த தகவல்:
அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் இவர் பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை நடிகை சமீரா ரெட்டி திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர் முழு கவனம் குடும்பத்தில் செலுத்தி வந்தார். தற்போது சமீராவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மேலும், சமீரா நடிப்பிலிருந்து முழுவதும் குட் பை சொல்லிவிட்டார். சமீரா சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வருகிறார்.
சமீரா ரெட்டி கம்பேக்:
இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் தன் குழந்தைகளுடன் விளையாடும் வீடியோ, புகைப்படம் என்று அனைத்தையும் பகிர்ந்து வந்தார். சமீரா ரெட்டி 13 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க இருக்கிறார். இவர், சிம்னி என்ற படத்தின் மூலம் தான் மீண்டும் பாலிவுட்டில் நடிக்க களம் இறங்கி இருக்கிறார். இது தொடர்பாக சமீரா சமீபத்தில் பேட்டியும் அளித்து இருந்தார்.