அந்த போல்ட் காட்சியில் நடிக்க இது தான் காரணம் - மனம் திறந்த 'சூழல் 2' பட நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்
சூழல் 2 படத்தில் நிர்வாண காட்சியில் நடித்தது தொடர்பாக சம்யுக்தா விஸ்வநாதன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கதிர். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் நடித்திருக்கும் படம் சுழல் 2.
விக்ரம் வேதா படத்தை இயக்கிய இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி எழுத்தில் உருவான வெப் தொடர் தான் சுழல். இந்த தொடரின் முதல் சீசன் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசனும் வெளியாகியிருக்கிறது.
இந்த சீசனை பிரம்மா மற்றும் சர்ஜுன் கே எம் என்பவர்கள் இயக்கியிருக்கிறார்கள். இந்த தொடர் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியிருந்தது.
சூழல் 2 படம்:
இந்த இரண்டாவது சீசனை புஷ்கர்-காயத்ரி தான் தயாரித்திருக்கிறார்கள். இந்த இரண்டாவது சீசனில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மஞ்சுமா மோகன், மோனிஷா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். எட்டு எபிசோடுகளாக இந்த தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் வரும் சில காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டு பெற்று இருக்கிறது.
படம் குறித்த தகவல்:
படத்தில் அஷ்ட காளிகள் பெயர்களை எட்டு பெண்களின் கதாபாத்திரங்களுக்கு இயக்குனர் வைத்திருக்கிறார். புராணத்தில் அரக்கனை அழிக்கும் தேவிகளை இந்த கதையோடு இணைத்து இயக்குனர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. இரண்டாவது எபிசோடில் எட்டு பேரையும் அறிமுகம் செய்யும் காட்சி அருமை. குறிப்பாக, ஜெயிலில் வரும் பெண்களை எல்லாம் ஆடைகளை அகற்றி நிர்வாணத்துடன் வற்புறுத்தி சோதனை இருப்பார்கள்.
நிர்வாண காட்சி சர்ச்சை:
இந்த காட்சியை ஆபாசம் இல்லாமல் இயக்குனர் உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வெப் தொடரில் நிர்வாண காட்சியில் நடித்து மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சம்யுக்தா விஸ்வநாதன், நிர்வாண காட்சியை இப்படித்தான் எடுக்கப் போகிறோம் என்று இயக்குனர் ஏற்கனவே சொல்லி இருந்தார். எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மாற்றி விடுவதாகவும் சொன்னார்.
சம்யுக்தா விஸ்வநாதன் விளக்கம்:
படத்தில் அந்த காட்சி தேவைப்பட்டது என்பதால் தான் என்னுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டு நான் நடித்தேன் என்று கூறி இருக்கிறார். மேலும், சம்யுக்தா விஸ்வநாதன் அவர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக இருக்கும் கட்சி சேரா என்ற ஆல்பத்தில் நடித்திருந்தார். இந்த பாடலை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் உருவாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சம்யுக்தா விஸ்வநாதன், இன்னும் சில வெப் தொடர்களிலும் நடித்திருக்கிறார். அதோடு சாரி 111, ஓமணப்பெண்ணே படங்களிலும் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.