திருமணம் ஆகி 4 ஆண்டுகள் கழித்து தாயான சங்கவி. முதன் முறையாக வெளியிட்ட தனது குழந்தையின் புகைப்படம்.

By Rajkumar · 17/5/2020

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வந்த நடிகைகள் தற்போது செகண்ட் இன்னிங்ஸ்சில் வலம் வந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், ஒரு சில நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அந்த வகையில் நடிகை சங்கவியும் தெரியும். நடிகை சங்கவி 1977ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் மைசூரில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் காவியா ரமேஷ். இவருடைய பாட்டி ஒரு கன்னட நடிகை. தனது 16 வயதில் அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து பிரபலம் ஆனார். அந்த படமே இவருக்கு அறிமுக படமாக இருந்தது.

தனது திருமணத்தின் போது நடிகை சங்கவி

அதன் பின்னர் இவருடைய நடிப்பு திறமையால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் 95 படங்களுக்கு மேல் நடித்தார். விஜய், அஜித், ரஜினி, விஜயகாந்த், கமல் சரத்குமார், பிரபு, சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் சங்கவி.

அஜித்துடன் அமராவதி, விஜயுடன் கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுசின் சுள்ளான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அவருக்கு வயது 30யை தாண்டியவுடன் பட வாய்ப்புகள் குறைந்தது. இருந்தும் கோகுலத்தில் சீதை, சாவித்ரி ஆகிய சீரியல்களிலும் நடித்தார் சங்கவி.

சங்கவி கடந்த 2016 ஆம் ஆண்டு தனது 38 வயதில் ஒரு ஐ.டி கம்பெனி ஒனருடன் பெங்களூரில் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் நடிகை சங்கவிக்கு 42 வயதில் பெண் குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில் நடிகை சங்கவி முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full